Sunday 6 October 2013

பைனலில் போபண்ணா ஜோடி

டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி தகுதி பெற்றது. 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜப்பான் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி, பிலிப்பைன்சின் டிரிட், பிரிட்டனின் டாமினிக் ஜோடியை 6-4, 7-6 என சுலபமாக வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது .

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

சானியா-காரா பிளாக் ஜோடி சாம்பியன்

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சீனாவில் உள்ள பீஜிங் நகரில், சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, ரஷ்யாவின் துஷிவினா, ஸ்பெயினின் சான்டோன்ஜா ஜோடியை சந்தித்தது.
ஒரு மணி நேரம் 6 நிமிடம், 51 வினாடி வரை நீடித்த பைனலில், அபாரமாக ஆடிய சானியா-பிளாக் ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இது, சானியா-காரா பிளாக் ஜோடி வென்ற இரண்டாவது பட்டம். சமீபத்தில் டோக்கியோவில் நடந்த ஜப்பான் ஓபன் தொடரில், இந்திய-ஜிம்பாப்வே ஜோடி கோப்பை வென்றது. தவிர இது, இந்த ஆண்டு சானியா வென்ற 5வது பட்டம். இவர், பிரிஸ்பேன் (ஜோடி-பெத்தானி மட்டக் சாண்ட்ஸ்), துபாய் சாம்பியன்ஷிப் (ஜோடி-பெத்தானி மட்டக் சாண்ட்ஸ்), நியூ ஹெவன் (ஜோடி-ஜீ ஜெங்) உள்ளிட்ட தொடர்களில் பட்டம் வென்றார். ஒட்டுமொத்தமாக இவர் வென்ற 19வது பட்டம்.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக