Saturday 23 February 2013

கிரென்கே செஸ்: ஆனந்த் சாம்பியன்

ஜெர்மனியின் படேன்-படேன் நகரில் நடைபெற்ற கிரென்கே கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 6.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.

கடைசிச் சுற்றில் ஜெர்மனியின் ஆர்காடிஜ் நைடிட்ஜை வீழ்த்தியதன் மூலம் ஆனந்த் சாம்பியன் ஆனார். இந்த ஆண்டில் அவர் வெல்லும் முதல் பட்டம் இது.

11 சுற்றுகளைக் கொண்ட இப் போட்டியில் 10 சுற்றுகளின் முடிவில் ஆனந்த், இத்தாலியின் ஃபேபியானோ கருணா ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தனர். இந்த நிலையில் கடைசிச் சுற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆனந்த், ஜெர்மனியின் ஆர்காடிஜை வீழ்த்தினார். 

எனினும் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்வதற்கு, ஃபேபியானோ கருணா-ஜெர்மனியின் டேனியல் ஃபிரிட்மேன் இடையிலான ஆட்டம் முடியும் வரை ஆனந்த் காத்திருக்க நேர்ந்தது. ஃபேபியானோ-டேனியல் ஆட்டம் டிராவில் முடியவே, ஆனந்தின் சாம்பியன் பட்டம் உறுதியானது. 

இந்தப் போட்டியில் 10 சுற்றுகள் வரை சிறப்பாக விளையாடிய ஃபேபியானோ, கடைசிச் சுற்றில் காய்களை நகர்த்துவதில் தவறு செய்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஒருவேளை இந்த சுற்றில் ஃபேபியானோ வெற்றி பெற்றிருந்தால், அவருக்கும், ஆனந்துக்கும் இடையில் "டை பிரேக்கர்' சுற்று கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். 

ஃபேபியானோ 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ், ஜெர்மனியின் ஜார்ஜ் மேயர் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், நைடிட்ஜ் 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும், ஃபிரிட்மேன் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக ஹாக்கி லீக்!

தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய மகளிர் உலக ஹாக்கி லீக் 2-வது சுற்றில் மோதிய இந்திய - கஜகஸ்தான் வீராங்கனைகள்.

இந்த ஆட்டத்தில் இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக