Wednesday 14 November 2012

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக, கர்நாடக ஆட்டம் டிரா: தில்லி, அசாம், பஞ்சாப் வெற்றி

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழகம், கர்நாடக அணிகளுக்கிடையேயான போட்டி டிராவானது.

சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி 168 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 538 ரன்கள் குவித்த டிக்ளேர் செய்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 154 ரன்களும், அபராஜித் 112 ரன்களும் எடுத்தனர்.

கர்நாடக அணித் தரப்பில் ராஜு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய கர்நாடக அணி 4ஆம் ஆட்ட நேர முடிவில் 187.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் சேர்த்தது. கர்நாடக அணியில் அதிக பட்சமாக கணேஷ் சதீஷ் ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்தார். அவர் 1 சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். 

சிறப்பாக விளையாடிய முரளிதரன் கெüதம் ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் எடுத்தனர். தமிழக அணித் தரப்பில் ரங்கராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்úஸ முடிவடையாத நிலையில், 4 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி ஆட்டம் டிராவானது.

தமிழக அணியை விட கர்நாடக அணி கூடுதலாக ரன்கள் எடுத்ததினால் கர்நாடகத்துக்கு 3 புள்ளிகளும், தமிழகத்துக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டன.

தில்லி, அசாம், பஞ்சாப் வெற்றி: ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 143 ரன்களில் ஒடிசா அணி ஆட்டமிழந்தது. பின்னர் பேட் செய்த தில்லி அணி 331 ரன்கள் எடுத்தது.

தனது 2ஆவது இன்னிங்ûஸத் தொடங்கிய ஒடிசா, 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் தில்லி அணிக்கு 82 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பின்னர் ஆடிய தில்லி அணி 15 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதேபோல் அசாம், ஜார்க்கண்ட அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் அசாம் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப், மேற்கு வங்க அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில், பஞ்சாப் அணி, இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்:
தமிழக அணி-538/4
(தினேஷ் கார்த்திக் 154*,
அபாரஜித் 112,
பிரசன்னா 74*,
சுனில் ராஜு 2வி/148)
கர்நாடக அணி-562/6
(கணேஷ் சதீஷ் 200*,
கெüதம் 130*, பவன் 69,
ரங்கராஜன் 3வி/119 )



-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஜோஹர் ஹாக்கி: ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

மலேசியாவில் நடைபெற்று வரும்ஜோஹர் ஹாக்கி கோப்பை போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி, 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.

திங்கள்கிழமை நடைபெற்ற லீக் சுற்றில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது இந்திய அணி. 

இப்போட்டியில், முன் கள வீரரான மன்தீப் சிங் சிறப்பாக விளையாடி 2 கோல்களை அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவரே ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது இந்திய அணி. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக