Monday 19 November 2012

மகளிர் உலக வாகையர் செஸ்: ஹரிகா நான்காவது சுற்றுக்குத்தகுதி!

த்ரோனவல்லி ஹரிகா (2512) - லெலா ஜவகிஸ்விலி (2455)
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.இன்று நடந்த மூன்றாவது  சுற்றுப்போட்டியின் மாற்று ஆட்டத்தில், வெள்ளைக் காய்களுடன் விளையாடிய இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா ஜார்ஜியாவின் லெலா ஜவகிஸ்விலியாவை 47 நகர்த்துதலில் வென்றார். இதன்  மூலம் மூன்றாவது சுற்றில் 1.5-0.5 என்ற புள்ளிக்கணக்கில் ஹரிகா வென்று நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.

-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ்: ஹரிகா மூன்றாவது சுற்றில் சமன் செய்தார்.!

த்ரோனவல்லி ஹரிகா
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த மூன்றாவது  சுற்றுப்போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா ஜார்ஜியாவின் லெலா ஜவகிஸ்விலி இடையேயான ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில், கடந்தமுறை இரண்டாமிடம் பெற்ற இந்தியாவின் ஹம்ப்பி, முதலிடம் பெற்ற  சீனாவின் யிஃபான் ஹோ, மூன்றாமிடம் பெற்ற ஸ்லோவெனியாவின் அன்னா முஷிசுக் ஆகிய மூவரும் வெளியேறிவிட்டதால், யார் வாகையர் பட்டத்தை வெல்வார் என்பது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

தற்போதைக்கு சீனாவின் ஸாஓ சியு முன்ன்னியில் இருக்கிறார்,


-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

ஜொஹொர் ஹாக்கி: இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வி!

ஜொஹார் பாரு, மலேசியா: இந்திய இளையோர் அணி,ஜொஹார் பாரு சுல்தான் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.

சுற்றுப்போட்டிகளில் தோல்வியே அடையாமல் சிறப்பாக விளையாடிவிட்டு, இறுதிப்போட்டியில் தோற்றுப்போனது இந்தியா.

ஜெர்மனியின் ஜொனஸ் கொமால் ஆட்டத்தின் பதினோராவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். பின்னர் 24 வது நிமிடத்தில் இந்தியாவின் சத்பீர் சிங் ஒரு கள கோல் அடித்து அதனை சமன் செய்தார். பின்னர் 30 ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜொசுவா டெலர்பெர் பெனல்டி கார்னர் மூலம் மற்றொரு கோல் அடித்து 2-1 என்ற முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெர்மனி ஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து 3-1 என்று முன்னிலை பெற்றது. இந்த முறை கோல் அடித்தவர் ஜெர்மனியின் ஃப்ளோரியன் அட்ரியன்ஸ்.

பின்னர் ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்த போது, இந்தியாவின் ஆகாஷ் தீப் ஒரு கோல் அடித்து 3-2 என்று முன்னிலையை குறைத்தாலும், அது வெற்றிக்கோ அல்லது கூடுதல் நேரம் பெறுவதற்க்கோ உதவவில்லை.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு நடைப்பெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது.


- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக