Wednesday 4 December 2013

உலக கோப்பை கபடி: இந்திய அணி வெற்றி

 
பாட்யாலா: ஸ்பெயின் அணிக்கு எதிரான உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெற்றி பெற்றது.

பஞ்சாப் மாநிலத்தில், 4வது உலக கோப்பை கபடி தொடர் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 

தனது முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்திய இந்திய ஆண்கள் அணி, நேற்று நடந்த லீக் போட்டியில் ஸ்பெயின் அணியை சந்தித்து. இதில் அசத்தலாக விளையாடிய இந்திய அணி 55-27 என வெற்றி பெற்றது. நாளை நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, கென்யாவை எதிர் கொள்கிறது.

பெண்கள் "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, கென்யாவை 56-21 என எளிதாக வென்றது. வரும் 7ம் தேதி நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணியை சந்திக்கிறது.


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Sunday 6 October 2013

பைனலில் போபண்ணா ஜோடி

டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி தகுதி பெற்றது. 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜப்பான் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி, பிலிப்பைன்சின் டிரிட், பிரிட்டனின் டாமினிக் ஜோடியை 6-4, 7-6 என சுலபமாக வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது .

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

சானியா-காரா பிளாக் ஜோடி சாம்பியன்

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சீனாவில் உள்ள பீஜிங் நகரில், சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, ரஷ்யாவின் துஷிவினா, ஸ்பெயினின் சான்டோன்ஜா ஜோடியை சந்தித்தது.
ஒரு மணி நேரம் 6 நிமிடம், 51 வினாடி வரை நீடித்த பைனலில், அபாரமாக ஆடிய சானியா-பிளாக் ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இது, சானியா-காரா பிளாக் ஜோடி வென்ற இரண்டாவது பட்டம். சமீபத்தில் டோக்கியோவில் நடந்த ஜப்பான் ஓபன் தொடரில், இந்திய-ஜிம்பாப்வே ஜோடி கோப்பை வென்றது. தவிர இது, இந்த ஆண்டு சானியா வென்ற 5வது பட்டம். இவர், பிரிஸ்பேன் (ஜோடி-பெத்தானி மட்டக் சாண்ட்ஸ்), துபாய் சாம்பியன்ஷிப் (ஜோடி-பெத்தானி மட்டக் சாண்ட்ஸ்), நியூ ஹெவன் (ஜோடி-ஜீ ஜெங்) உள்ளிட்ட தொடர்களில் பட்டம் வென்றார். ஒட்டுமொத்தமாக இவர் வென்ற 19வது பட்டம்.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 3 October 2013

ஜூனியர் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

ஜோகர் பக்ரு: சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி (21 வயது) தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று நடந்த பைனலில், மலேசியாவை தோற்கடித்தது.
மலேசியாவில் உள்ள ஜோகர் பக்ரு நகரில், 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3வது சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதில் அர்ஜென்டினா, இந்தியா, இங்கிலாந்து, தென் கொரியா, மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன.
லீக் சுற்றில் அசத்திய இந்தியா, மலேசியா அணிகள் பைனலுக்கு முன்னேறின. நேற்று நடந்த பைனலில், துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 22வது நிமிடத்தில் அமான் மிராஷ் டிர்கே முதல் கோல் அடித்தார். இதற்கு மலேசிய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் அபார ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு துணைக் கேப்டன் அபான் யூசப் (54வது நிமிடம்), கேப்டன் மன்பிரீத் சிங் (64வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய மலேசிய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பை வென்றது.
வீரர்களுக்கு பரிசு: சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி (21 வயது) தொடரில், முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்த இந்திய வீரர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்க, ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) நேற்று அறிவித்தது. பயிற்சியாளர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் பரிசு வழங்க அறிவித்தது. சமீபத்தில் முடிந்த பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் சிறந்த கோல் கீப்பருக்கான விருது வென்ற இந்தியாவின் சவிதாவுக்கு, ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்க அறிவிக்கப்பட்டது.

 - இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 26 September 2013

ஹாக்கி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி :பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்

ஜோகர் பக்ரு: பாகிஸ்தானுக்கு எதிரான சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி (21 வயது) லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே இங்கிலாந்து, அர்ஜென்டினா அணிகளை வீழ்த்திய இந்தியா, "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
மலேசியாவில் உள்ள ஜோகர் பக்ரு நகரில், 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3வது சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, இந்தியா, இங்கிலாந்து, தென் கொரியா, மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.
முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்து, அர்ஜென்டினா அணிகளை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு 38வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பில் சுக்மன்ஜித் சிங், முதல் கோல் அடித்தார். பின், 45வது நிமிடத்தில் இந்திய வீரர் இம்ரான் கான், "பீல்டு' கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 46வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில், சுக்மன்ஜித் சிங், இரண்டாவது கோல் அடித்தார். பின், 61வது நிமிடத்தில் இந்தியாவின் ராமன்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய பாகிஸ்தான் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
இதுவரை விளையாடிய மூன்று லீக் போட்டிகளில் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் தலா 9 புள்ளிகளுடன் மலேசியா, இந்தியா அணிகள் உள்ளன. பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் தலா ஒரு புள்ளியுடன் அர்ஜென்டினா, தென் கொரியா அணிகள் உள்ளன. மூன்று போட்டியிலும் தோல்வி கண்ட இங்கிலாந்து அணி 6வது இடத்தில் உள்ளது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

பாட்மின்டன்: சிந்து அவுட்: காலிறுதியில் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம்

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஆண்கள் பிரிவு காலிறுதிக்கு, இந்தியாவின் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம் முன்னேறினர்.
ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் சிந்து, ஜப்பானின் அகேன் யமகுசியை சந்தித்தார். 32 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், சிந்து 6-21, 17-21 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 
காலிறுதியில் ஜெயராம்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் அஜய் ஜெயராம், ஜப்பானின் யூசி லெகிடாவை 21-13, 11-21, 21-18 என்ற செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கோஜயை 21-12, 21-16 என்ற செட்களில் வென்று, காலிறுதிக்கு முன்னேறினார். பிரணாய், டென்மார்க்கின் ஜார்ஜென்சனை 21-14, 13-21, 21-17 என்ற செட்களில் வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
சுமீத் ஜோடி தோல்வி:
ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுமீத், மானு அட்ரி ஜோடி, சீனாவின் லியு, குயு ஜிகான் ஜோடியிடம், 17-21, 15-21 என வீழ்ந்தது.
தரவரிசை:
பாட்மின்டன் போட்டியில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை, உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) நேற்று வெளியிட்டது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து 10வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல், 4வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆண்கள் ஒற்றையரில், இந்தியாவின் காஷ்யப், ஒரு இடம் பின்தங்கி 14வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான குருசாய்தத் (23வது இடம்), அஜய் ஜெயராம் (30வது), சவுரப் வர்மா (46வது) ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர். ஆனந்த் பவார் (37வது), சாய் பிரனீத் (38வது), ஸ்ரீகாந்த் (39வது) ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு இரட்டையரில் "டாப்-25' வரிசையில் ஒரு இந்தியர் கூட இடம் பெறவில்லை. சமீபத்தில் முடிந்த முதலாவது இந்தியன் பாட்மின்டன் லீக் (ஐ.பி.எல்.,) தொடருக்கு பின், இந்திய நட்சத்திரங்கள் சீன தைபே மற்றும் சீனாவில் நடந்த போட்டிகளை புறக்கணித்ததால், பின்னடைவை சந்தித்தனர்.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Wednesday 25 September 2013

சிந்து அசத்தல் வெற்றி

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து வெற்றி பெற்றார்.
ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இளம் இந்திய வீராங்கனையான சிந்து, ஜப்பானின் யூகினோ நாகாயை சந்தித்தார். முதல் செட்டை சிந்து 21-12 என வென்றார். இரண்டாவது செட்டை 21-13 என சுலபமாக கைப்பற்றினார். 
முடிவில், சிந்து 21-12, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 
மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி லாட், ஜப்பானின் ஷயாகாவிடம், 15-21, 10-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். 
அஜய் ஜெயராம் அசத்தல்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம், சீன தைபேவின் தின் சென் சூவை 21-11, 21-18 என்ற நேர்செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 
மற்றொரு போட்டிகளில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் சாவ் ஷசாக்கியை 22-20, 22-24, 21-18 என்ற செட்களில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்தியாவின் ஆனந்த் பவார், இந்தோனேஷியாவின் சோனி குன்கோராவை 21-17, 7-21, 21-18 என்ற செட்களில் வென்றார். இந்திய வீரர் பிரனாய், ஹாங்காங்கின் விங் கீ வாங்கை 15-21, 21-17, 24-22 என்ற செட்களில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
 இந்தியாவின் சாய் பிரனீத், ஹாங்காங்கின் யுன் ஹூவிடம், 21-23, 18-21 என போராடி தோல்வியடைந்தார். இந்தியாவின் சவுரவ் வர்மா, ஜப்பானின் ஜுன் தகிமுராவிடம் 24-22, 19-21, 14-21 என்ற செட்களில் வீழ்ந்தார். 
சுமித் ஜோடி அபாரம்: 
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித், மானு அட்ரி ஜோடி, ஜப்பானின் ஹிரோயூகி, ரொயோடா ஜோடியை 21-17, 21-15 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக


சிந்துவுக்கு அர்ஜுனா விருது

புதுடில்லி: சிந்துவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
இந்திய பாட்மின்டன் அணியின் இளம் வீராங்கனை சிந்து, 18. சமீபத்தில் குவாங்சுவில் நடந்த உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றார். இதை பாராட்டும்விதமாக, அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றார். கடந்த ஆக., 31ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (ஆக., 31) இவ்விருதுகளை வழங்கினார். ஆனால், இந்தியன் பாட்மின்டன் லீக் தொடர் பைனலில் விளையாடியதால் சிந்துவால் பங்கேற்க முடியவில்லை. நேற்று இந்திய விளையாட்டு ஆணைய கூட்டத்தில் (எஸ்.ஏ.ஐ.,) இவருக்கு அர்ஜுனா விருது தரப்பட்டது. அப்போது, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்தார்.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

காலிறுதியில் சானியா ஜோடி

டோக்கியோ: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி முன்னேறியது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, பிரான்சின் கிறிஸ்டினா, இத்தாலியின் பிளேவியா ஜோடியை எதிர் கொண்டது. இதில் முதல் செட்டை 2-6 என இழந்த சானியா ஜோடி, அடுத்த செட்டை 6-0 என கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் "சூப்பர்- டை பிரேக்கரில்' சானியா ஜோடி 10-7 என வென்றது. முடிவில், சானியா, காரா பிளாக் ஜோடி 2-6, 6-0, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

பூபதி ஜோடி ஏமாற்றம்

பாங்காங்: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் பூபதி, சுவீடனின் ராபர்ட் ஜோடி தோல்வியடைந்தது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பூபதி, சுவீடனின் ராபர்ட் ஜோடி, ஸ்பெயினின் டேனியல், இத்தாலியின் பாலோ ஜோடியை சந்தித்தது. இதில் முதல் செட்டை 6-2 என கைப்பற்றி பூபதி ஜோடி, இரண்டாவது செட்டை 3-6 என பறிகொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி "சூப்பர்- டை பிரேக்கருக்கு' சென்றது. இதில் போராடிய பூபதி ஜோடி 8-10 என இழந்தது. முடிவில் பூபதி, ராபர்ட் ஜோடி 6-2, 3-6, 8-10 என தோல்வியடைந்தது.

- இராசேந்திர உடையார
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 20 June 2013

உலக மகளிர் ஹாக்கி : இந்திய மகளிர் வெளியேற்றம்.


நாட்டர்டாம், நெதர்லாந்து: உலக மகளிர் ஹாக்கி சுற்றுப்போட்டிகளின் 3 ஆவது போட்டியான  காலிறுதியில் இந்தியா 1-8 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. 

நெதர்லாந்தின் ராட்டெர்டாம் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் இந்திய மகளிர் ஆதிக்கம் செலுத்தினர். எனினும் இந்த ஆதிக்கம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 21-வது நிமிடத்தில் ஆட்டம் நெதர்லாந்தின் வசமானது. தொடர்ந்து அபாரமாக ஆடிய நெதர்லாந்து, 2-வது பாதி ஆட்டத்தை முற்றிலுமாக தன் வசமாக்கியது. இதனால் அந்த அணி 8-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தது. 

வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் கொரியா, ஜெர்மனியையும், நெதர்லாந்து, நியூஸிலாந்தையும் சந்திக்கின்றன. 5 முதல் 8 வரையிலான இடங்களுக்கான ஆட்டத்தில் இந்தியா, ஜப்பானையும், பெல்ஜியம், சிலியையும் சந்திக்கின்றன.
- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

கார்ல்ஸெனிடம் வீழ்ந்தார் ஆனந்த்

மாஸ்கோ: தால் நினைவு சதுரங்க போட்டியின் 5-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மாக்னெஸ் கார்ல்ஸெனிடம் தோல்வி கண்டார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

கறுப்பு காய்களுடன் ஆடிய விஸ்வநாதன் ஆனந்த், மோசமான துவக்க ஆட்டத்தினால் 29 நகர்த்துதலில் தோல்வியை தழுவினார். அதே வேளையில்,
5-வது சுற்றில் இஸ்ரேலின் போரீஸ் கெல்பான்ட், ரஷியாவின் அலெக்ஸôண்டர் மோரோùஸவிச்சை வீழ்த்தினார். தற்போதைய நிலையில் போரீஸ் கெல்பான்ட், அமெரிக்காவின் ஹிகாரா நாகமுரா ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். மாக்னெஸ் கார்ல்ùஸன், அஜர்பைஜானின் சஹாரியர் மமேத்யாரோவ் ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரஷியாவின் டிமிட்ரி ஆன்ட்ரெய்க்கின், இத்தாலியின் ஃபேபியானோ கருணா ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

ஆனந்த், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக், அலெக்சாண்டர் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளனர். 

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Tuesday 18 June 2013

உலக ஹாக்கி :இந்தியா நியூஸிலாந்து ஆட்டம் சமன்.

இந்தியாவின் சந்தீப் சிங் பந்தை தடுக்க முனைகிறார்
ராட்டர்டாம், நெதர்லாந்து: உலக ஹாக்கிப்போட்டியின் கடைசி சுற்றுப்போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணியுடன் சமன் செய்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் நியுஸிலாந்து அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே இந்தியா தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.நியுஸிலாந்து அணி மீண்டும் ஒரு கோல் அடிக்க எண்ணிக்கை மீண்டும் 2-2 என சமன் ஆனது. சிறிது நேரத்திலேயே இந்தியா மீண்டும் ஒரு கோல் அடித்து 3-2 என்று முன்னிலை பெற்றது. இந்நிலையில் நியூஸிலாந்து அணிக்கு கிடைத்த ஒரு தனி நேரிடை வாய்ப்பை இந்தியாவின் காப்பாளர் ஸ்ரீஜேஸ் அற்புதமாகத்தடுத்தார். ஆனாலும் நியுஸிலாந்து மீண்டும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. இரு அணிகளுக்கும் இது இரண்டாவது சமன் என்பதால் இரண்டு அணிகளும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

காலிறுதி ஆட்டங்களின் அட்டவணை

பெல்ஜியம் (எ) அயர்லாந்து
நியுஸிலாந்து (எ) ஸ்பெயின்
ஆஸ்திரேலியா (எ) இந்தியா
நெதர்லாந்து (எ) ஃப்ரான்ஸ்

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Monday 25 March 2013

மியாமி மாஸ்​டர்ஸ்: 2-வது சுற்​றில் போபண்ணா,​​சானியா ஜோடி​கள்

மியாமி மாஸ்​டர்ஸ் டென்​னிஸ் போட்​டி​யின் இரட்​டை​யர் பிரி​வில் இந்​தி​யா​வின் ரோஹன் போபண்ணா,​​ சானியா மிர்சா ஆகி​யோர் அடங்​கிய ஜோடி​கள் 2-வது சுற்​றுக்கு முன்​னே​றி​யுள்​ளன.​

அமெ​ரிக்​கா​வின் மியாமி நக​ரில் நடை​பெற்று வரும் இப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் ரோஹன் போபண்ணா-​அமெ​ரிக்​கா​வின் ராஜீவ் ராம் ஜோடி தங்​க​ளின் முதல் சுற்​றில் 7-6 ​(8),​ 6-4 என்ற நேர் செட்​க​ளில் அமெ​ரிக்​கா​வின் எரிக் பியூ​டோ​ராக்-​ஆஸ்​தி​ரே​லி​யா​வின் பால் ஹேன்லி ஜோடியை வீழ்த்​தி​யது.​ போபண்ணா ஜோடி அடுத்த சுற்​றில் குரோ​ஷி​யா​வின் மரின் சிலிச்-​செக்.குடி​ய​ர​சின் லூகாஸ் துலோகி ஜோடியை சந்​திக்​கி​றது.​

மக​ளிர் பிரி​வில் இரட்​டை​யர் பிரி​வில் இந்​தி​யா​வின் சானியா மிர்சா-​அமெ​ரிக்​கா​வின் பெத்​தா​னியே மடேக் சேன்ட்ஸ் ஜோடி 7-5,​ 6-3 என்ற நேர் செட்​க​ளில் செக்.குடி​ய​ர​சின் இவா பிர்​ன​ரோவா-​ரஷி​யா​வின் லெப்​செங்கோ ஜோடி​யைத் தோற்​க​டித்​தது.​ சானியா ஜோடி தங்​க​ளின் 2-வது சுற்​றில் ஆஸ்​தி​ரே​லி​யா​வின் ஜர்​மிலா-​ஜெர்​ம​னி​யின் சபைன் லிசிக்கி ஜோடியை சந்​திக்​கி​றது.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Friday 15 March 2013

உலக மகளிர் இறகுப்பந்து - சாய்னா நேவால் இரண்டாமிடம்

சாய்னா நேவால் 

உலக மகளிர் இறகுப்பந்து திறனாளர் வரிசையில், இந்தியாவின் சாய்னா நேவால் மீண்டும் இரண்டாவது  இடத்தைப் பிடித்துள்ளார்.கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து  இங்கிலாந்து இறகுப்பந்து  போட்டியின் அரையிறுதியில் தோற்ற நிலையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சாய்னா, தற்போது மீண்டும் இரண்டாவது  இடத்துக்கு முன்னேறியுள்ளார். 


இந்தியாவின் காஷ்யப் 2 இடங்கள் முன்னேறி தற்போது 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.இந்தியாவின் அஜய் ஜெயராம் தொடர்ந்து 31-வது இடத்திலும், குருசாய் தத், செüரப் வர்மா ஆகியோர் முறையே 2 மற்றும் 4 இடங்கள் முன்னேறி 36 மற்றும் 39-வது இடத்திலும் உள்ளனர்.இந்தியாவின் ஆனந்த் பவார் 44-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 16-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

அஸ்லன் ஷா ஹாக்கி: இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது இந்தியா



அஸ்லன் ஷா ஹாக்கிப் போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது. இதன்மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா. 

மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில், நடப்புச் சாம்பியன் நியூஸிலாந்தை எதிர்கொண்டது இந்தியா.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்காத நிலையில், 2-வது பாதி ஆட்டத்தின் 40 மற்றும் 55-வது நிமிடங்களில் கோலடித்த நியூஸிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. 

இதன்மூலம் 2-வது வெற்றியை ருசித்த நியூஸிலாந்து, இறுதிச்சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. 

மற்ற இரு ஆட்டங்களும் டிரா: ஆஸ்திரேலியா-கொரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதேபோல் பாகிஸ்தான்-மலேசியா இடையிலான ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

தற்போது 6 அணிகளும் தலா 4 ஆட்டங்களில் விளையாடிவிட்ட நிலையில், ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முறையே முதல் 2 இடங்களிலும், நியூஸிலாந்து 6 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், கொரியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முறையே 4 மற்றும் 5-வது இடத்திலும், இந்தியா 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இறுதிச்சுற்று வாய்ப்பு எப்படி? தற்போதைய நிலையில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதற்கு ஆஸ்திரேலியா, மலேசியா, நடப்புச் சாம்பியன் நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது. 

வரும் சனிக்கிழமை நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். 

சனிக்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தையும், மலேசியா, இந்தியாவையும் சந்திக்கின்றன. 

இதில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துடன் டிரா செய்தாலே இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடும். அப்படி நடக்கும்பட்சத்தில், மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றாலும் மலேசியா எளிதாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடும். 

ஒருவேளை நியூஸிலாந்திடம் ஆஸ்திரேலியா தோற்குமானால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மலேசியா டிரா அல்லது வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Tuesday 5 March 2013

சீனியர் மகளிர் மல்யுத்தம்: இந்தியாவுக்கு 5-வது இடம்

மங்கோலியாவில் நடைபெற்ற மகளிருக்கான சீனியர் மல்யுத்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது.

இப்போட்டிகள் மார்ச் 1 முதல் 3-ம் தேதி வரை நடைபெற்றன. 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டிக்கு இந்திய அணி முதன்முறையாகத் தகுதி பெற்றது.

"பி' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடனும், அடுத்த ஆட்டத்தில் மங்கோலிய அணிக்கு எதிராகவும் தோல்வியைத் தழுவியது. கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் 59 கிலோ பிரிவில் பங்கேற்ற கீதா, ஜப்பான், கனடா, மங்கோலியா மற்றும் பெலாரஸ் அணி வீராங்கனைகளை வீழ்த்தினார்.

இப்போட்டியில் சீனா அணி தங்கப் பதக்கம் வென்றது. மங்கோலிய அணி வெள்ளிப் பதக்கமும், ஜப்பான் அணி வெண்கலப் பதக்கமும் வென்றன.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 28 February 2013

ஜெர்மன் ஓபன் பாட்மிண்டன் 2-வது சுற்றில் ஜெயராம், ஆனந்த்

ஜெர்மன் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், ஆனந்த் பவார் மற்றும் அரவிந்த் பட் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஜெர்மனியின் மயூல்ஹிம் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன. போட்டித் தரவரிசையில் 10-ம் இடத்தில் உள்ள ஜெயராம் 21-12, 21-18 என்ற செட்களில் பிரான்ஸின் பிரைஸ் லீவெர்டெûஸ வீழ்த்தினார். இந்த ஆட்டத்தை அரை மணி நேரத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வந்தார் ஜெயராம்.

மற்றொரு ஆட்டத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆனந்த் பவார் 22-10, 16-21, 21-16 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் மைக்கேல் லான்ஸ்டெயினரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல, பெங்களூரைச் சேர்ந்த அரவிந்த் 21-17, 21-15 என்ற நேர் செட்களில் சக நாட்டவரான அனுப் ஸ்ரீதரை வீழ்த்தினார்.

இந்தியாவின் மற்றொரு வீரரான குருசாய்தத், சீன வீரர் பின் கியோவிடம் தோல்வி கண்டார்.

இப்போட்டியின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்திய ஜோடியான அருண் விஷ்ணு மற்றும் அபர்ணா பாலன் 21-15, 21-10 என்ற கணக்கில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தருண் கோனா ஜோடி 23-25, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த ரிக்கி விதன்டோ மற்றும் பஸ்பிதா ரிச்சி திலி ஜோடியை வீழ்த்தியது. இந்திய ஜோடி, முதல் செட்டை இழந்து பின்னும், அடுத்த இரு செட்களை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி, தங்களது அடுத்த சுற்றில் இங்கிலாந்து ஜோடியை சந்திக்கிறது.

கலப்பு இரட்டையர் வெற்றியைத் தொடர்ந்து மகளிர் இரட்டையர் பிரிவிலும் அஸ்வினி ஜோடி வெற்றி பெற்றது.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

துபை டென்னிஸ்: சோம்தேவ் தோல்வி

துபை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் தோல்வியைத் தழுவினார்.

புதன்கிழமை நடைபெற்ற 2-ம் சுற்று ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவின் ஜுவான் மார்ட்டினுடன் மோதினார் சோம்தேவ்.

உலகின் முன்னணி வீரரான மார்ட்டின் எளிதில் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். 

ஆனால் அதற்கு சோம்தேவ் தடையாக இருந்தார். இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. 

இறுதியில் கடும் போராட்டத்துக்குப் பின் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் மார்ட்டின் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் தாம்ஸ் பெர்டிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டாபியஸ் கெம்கேவை தோற்கடித்தார்.

2-ம் சுற்று ஆட்டத்தின்போது, ஆர்ஜெண்டீனாவின் கால்பந்து ஜாம்பவானான மரடோனா டென்னிஸ் விளையாடினார். சோம்தேவ், மார்ட்டின் ஆட்டம் முடிவடைந்த பின், மார்ட்டினுடன் டென்னிஸ் விளையாடினார் மரடோனா. கால்பந்து வீரரான மரடோனா, டென்னிஸ் மட்டையைப் பிடித்து விளையாடியது, ரசிகர்களை வியக்க வைத்தது. மார்டீனும், ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஐடிஎஃப் டென்னிஸ்: காலிறுதியில் 5 இந்தியர்கள்

சர்வதேச டென்னிஸ் சம்மேளன (ஐடிஎஃப்) ஆடவர் பியூச்சர்ஸ் போட்டியின் காலிறுதிக்கு 5 இந்தியர்கள் முன்னேறியுள்ளனர்.

இப்போட்டிகள் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. 

ஆடவர் ஒற்றையர் போட்டியில் எல்வின் அந்தோனி, ரஞ்சித் விராலி-முருகேசன், என். விஜய் சுந்தர் பிரசாத், ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜயந்த் மாலிக் ஆகிய 5 வீரர்கள் இப்போட்டியின் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இரட்டையர் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 6-1, 4-6 (10-7) என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த எல்வின் அந்தோனி, ஃபேரிஸ் முகமது ஜோடியை வீழ்த்தியது



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Wednesday 27 February 2013

துபை ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் சோம்தேவ்

துபை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் சோம்தேவ் முன்னேறியுள்ளார். துபையில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சோம்தேவ் தனது முதல் சுற்றில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் இகர் குனிட்ஸினை தோற்கடித்தார்.

புதன்கிழமை நடைபெறவுள்ள 2-வது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டினை சந்திக்கிறார் சோம்தேவ். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜுவான் மார்ட்டினை சந்திப்பதால் சோம்தேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

சர்வதேச செஸ்: கெல்பான்டுடன் டிரா செய்தார் ஆனந்த்

ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 3-வது சுற்றில் இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இப் போட்டி நடைபெற்று வருகிறது. 4 வீரர்கள் பங்கேற்றுள்ள இப் போட்டி டபுள் ரவுண்டு ராபின் முறையில் நடைபெற்று வருகிறது. 

இதில் முதல் இரு சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

அதில் ஓர் ஆட்டத்தில் ஆனந்தும், கெல்பான்டும் மோதினர். முதல் வெற்றியை பெறுவதற்காக கெல்பான்ட் கடுமையாகப் போராடினார். எனினும் ஆனந்த் சிறப்பாக காய்களை நகர்த்தியதால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. 

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கடும் போராட்டத்துக்குப் பிறகு கெல்பான்டை வீழ்த்தி ஆனந்த் 5-வது முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் இத்தாலியின் ஃபேபியானோ கருணா-முன்னாள் உலக சாம்பியனான ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோருக்கு இடையிலான மற்றொரு ஆட்டமும் டிராவில் முடிந்தது. 

தற்போது 3 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் 4 வீரர்களும் தலா 1.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு 2-வது ரவுண்டு ராபின் சுற்று தொடங்கவுள்ளது.




- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Monday 25 February 2013

உலகின் மூத்த மாரத்தான் வீரர் ஃபுஜா சிங் ஓய்வு பெற்றார்

உலகின் மூத்த மாரத்தான் வீரர் ஃபுஜா சிங் (101), ஹாங்காங்கில் நடைபெற்ற மாரத்தான் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

இந்தியாவில் பிறந்தவரான இவர், இப்போது லண்டனில் வசித்து வருகிறார். "டர்பேனுடு டொர்னாடோ' என்று அழைக்கப்படும் ஃபுஜா சிங், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹாங்காங் மாரத்தான் போட்டியின் 10 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 32 நிமிடங்கள் மற்றும் 28 விநாடிகளில் கடந்தார்.

போட்டி முடிந்த பின் தனது நீண்ட பயணம் குறித்து ஃபுஜா சிங் கூறியது: இப்போது மிக்க மகிழ்ச்சியுடன் உள்ளேன். ஓடுவதால் எந்த உடல் பாதிப்பும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஓடும்போது நன்கு இயங்குவதாக உணர்கிறேன். 

ஆனால், இப்போது அவ்வாறு இருப்பதில்லை. ஓடும்போது சோர்வு ஏற்படுகிறது. ஓய்வு பெறும் இந்நாளை என்னால் மறக்க முடியாது. ஆனால், நற்பணிகளுக்கு பணம் திரட்டுவதற்காக எனது ஓட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

1999-ம் ஆண்டு முதல் ஓடத் தொடங்கிய இவர், ஆங்கிலம் பேசத் தெரியாதது வருத்தம் அளிப்பதாக ஒருமுறை தெரிவித்தார். வரும் ஏப்ரல் 1-ம் தேதி, இவர் 102 வயதைத் தொடுகிறார். டொர்னாடோவில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற முழு மாரத்தான் போட்டியில் இவர் பங்கேற்றார். 

இதன்மூலம் இப்போட்டியில் பங்கேற்ற அதிக வயதுடையவர் என்ற பெருமையை ஃபுஜா சிங் பெற்றார். ஆனால், முறையான பிறப்புச் சான்றிதழ் இன்மையால் இவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஏடிபி ஓபன்: போபண்ணா ஜோடி சாம்பியன்

ஏடிபி ஓபன் 13 பட்டத்துக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, பிரிட்டனின் ஃபிளெமிங் ஜோடி பட்டம் வென்றது.

பிரான்ஸின் மார்சேல் நகரில் இப்போட்டி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அஸிம்-உல்-ஹக் குரேஷி, ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியை போபண்ணா
ஜோடி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 6-4, 7-6(3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் போபண்ணா ஜோடிக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. மேலும், போபண்ணா, ஃபிளெமிங் ஆகியோர் தலா 250 தரவரிசைப் புள்ளிகளையும் பெற்றனர்.

இத்துடன், இரட்டையர் பிரிவில் போபண்ணா எட்டு ஏடிபி ஓபன் பட்டங்களை வென்றுள்ளார்.


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஆசிய ஸ்குவாஷ்: தங்கம் வென்றது மகளிர் அணி

தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் தங்கம் வென்றனர்.

அதே சமயம், இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவிய இந்திய ஆடவர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட்டது.

இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆடவர் மற்றும் மகளிர் என இரு அணிகளும் முன்னேறியிருந்தன.

இறுதிச்சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்திய மகளிர் அணி ஹாங்காங் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது.

அதே சமயம், பாகிஸ்தான் அணியுடன் மோதிய ஆடவர் அணியினர் 0-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினர். இதனால் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Sunday 24 February 2013

ஏடிபி ஓபன்: அரையிறுதியில் போபண்ணா ஜோடி

ஏடிபி ஓபன் 13 டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா, பிரிட்டனின் ஃபிளெமிங் ஜோடி முன்னேறியுள்ளது.

பிரான்ஸின் மார்சேல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலிறுதியில் போபண்ணா ஜோடி 6-3, 6-7(2), 10-7 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேம்ஸ் செரிடனி, கனடாவின் அடில் ஷம்ஸ்தீன் ஜோடியை வீழ்த்தியது.

இந்த ஜோடி, தங்களது அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜூலியன் நோலி, ஸ்லோவேகியாவின் ஃபிலிப் போலஸ்க் ஜோடியுடன் மோதவுள்ளது.

இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது சுற்றில் விளையாடிய இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், ஆஸ்திரேலியாவின் பெர்னட் டாமிக்குடன் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.



- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஆசிய ஸ்குவாஷ்: இறுதிச்சுற்றில் இந்தியா

தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன.

சியோலில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆடவர் அணி 2-1 என்ற கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

அதேபோல் மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி
பெற்றது.

இரண்டாவது முறையாக, ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் ஆசிய ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. 

இதற்கு முன் 2003-ம் ஆண்டு இஸ்லாமாபாதில் நடைபெற்ற போட்டியில் இரு பிரிவுகளும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

துபை டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்

துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸô, அமெரிக்காவின் மேட்டெக் சான்ட்சாஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
துபையில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் நடியா பெட்ரோவா, கத்ரினா ஸ்ரிபட்னிக் ஜோடியுடன் சானியா ஜோடி பலப்பரீட்சை
நடத்தியது.

1 மணி நேரம் 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி 6-4, 2-6, 10-7 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
 
இந்த சீசனில் சானியா வெல்லும் இரண்டாவது பட்டம் இதுவாகும். இத்துடன் ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் 16-வது பட்டங்களை அவர் வென்றுள்ளார்



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Saturday 23 February 2013

கிரென்கே செஸ்: ஆனந்த் சாம்பியன்

ஜெர்மனியின் படேன்-படேன் நகரில் நடைபெற்ற கிரென்கே கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 6.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.

கடைசிச் சுற்றில் ஜெர்மனியின் ஆர்காடிஜ் நைடிட்ஜை வீழ்த்தியதன் மூலம் ஆனந்த் சாம்பியன் ஆனார். இந்த ஆண்டில் அவர் வெல்லும் முதல் பட்டம் இது.

11 சுற்றுகளைக் கொண்ட இப் போட்டியில் 10 சுற்றுகளின் முடிவில் ஆனந்த், இத்தாலியின் ஃபேபியானோ கருணா ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தனர். இந்த நிலையில் கடைசிச் சுற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆனந்த், ஜெர்மனியின் ஆர்காடிஜை வீழ்த்தினார். 

எனினும் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்வதற்கு, ஃபேபியானோ கருணா-ஜெர்மனியின் டேனியல் ஃபிரிட்மேன் இடையிலான ஆட்டம் முடியும் வரை ஆனந்த் காத்திருக்க நேர்ந்தது. ஃபேபியானோ-டேனியல் ஆட்டம் டிராவில் முடியவே, ஆனந்தின் சாம்பியன் பட்டம் உறுதியானது. 

இந்தப் போட்டியில் 10 சுற்றுகள் வரை சிறப்பாக விளையாடிய ஃபேபியானோ, கடைசிச் சுற்றில் காய்களை நகர்த்துவதில் தவறு செய்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஒருவேளை இந்த சுற்றில் ஃபேபியானோ வெற்றி பெற்றிருந்தால், அவருக்கும், ஆனந்துக்கும் இடையில் "டை பிரேக்கர்' சுற்று கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். 

ஃபேபியானோ 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ், ஜெர்மனியின் ஜார்ஜ் மேயர் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், நைடிட்ஜ் 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும், ஃபிரிட்மேன் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக ஹாக்கி லீக்!

தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய மகளிர் உலக ஹாக்கி லீக் 2-வது சுற்றில் மோதிய இந்திய - கஜகஸ்தான் வீராங்கனைகள்.

இந்த ஆட்டத்தில் இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Friday 22 February 2013

பாட்மிண்டன் தரவரிசை: 2-வது இடத்தில் சாய்னா

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார். அதேநேரத்தில் இந்திய வீரர் காஷ்யப், இரண்டு இடங்களை இழந்து தற்போது 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 

கடந்த ஒரு மாதமாக காஷ்யப் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால் அவர் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 16-வது இடத்தில் உள்ளார்.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக