Thursday 15 November 2012

கொனெரு ஹம்பி தோல்வி. போட்டியிலிருந்து வெளியேறினார்..

கொனெரு ஹம்பி(2610), சுகோவா நாடியாலா(2451)
கன்ட்டி மன்ஷிஸ்க், ரஷ்யா: உலக செஸ் மகளிர் வாகையர் பட்டத்திற்கான இரண்டாம் சுற்று மாற்று ஆட்டத்திலும் இந்தியாவின் கொனெரு ஹம்பி தோல்வியை தழுவியதால் போட்டியிலிருந்தே வெளியேற்றப்பட்டிருக்கிறார். இவர் உக்ரைனின் நாடியாலா சுகோவாவிடம் 43 நகர்த்துதலில் கருப்பு காய்களுடன் தோற்றுப்போனார், 

ஆனால் இந்தியாவின் மற்றொரு நட்சத்திரம் த்ரோனவல்லி ஹரிகா மாற்று ஆட்டத்தில் எளிதில் சமநிலை செய்து அடுத்த சுற்றுக்குத்தகுதி பெற்றிருக்கிறார்.

-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

ஜொஹார் ஹாக்கி: இந்திய- பாகிஸ்தான் ஆட்டம் சமன்..

மலேசியாவில் நடைபெற்று வரும்ஜோஹர் ஹாக்கி கோப்பை போட்டியின் லீக் சுற்றில், இந்தியாவிற்க்கும், பாகிஸ்தானிற்க்கும் இடையிலான ஆட்டம், எத்தரப்பிற்க்கும் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

புதன்கிழமை நடைபெற்ற லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இப்போட்டியில், இறுதிவரை இரு அணிகளும் கோல் போடாததால், ஆட்டம் சமனில் முடிந்தது. முன்னதாக நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவை 2-0 என்ற புள்ளிக்கணக்கிலும், ஜெர்மனியை 3-1 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தியது. இதன் மூலம் தற்போது 7 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.

மற்றொரு போட்டியில் மலேசியா, நியூசிலாந்து அணியிடம் 5-2 என்ற புள்ளிக்கணக்கில் படுதோல்வி அடைந்தது.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ்: ஹரிகா வெற்றி! ஹம்பி தோல்வி!

GM த்ரோனவல்லி ஹரிகா (2512)
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த இரண்டாவது சுற்றுப்போட்டிகளில் இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா அர்மெனியாவின் எலினா டெனியெலியனை 33 நகர்த்துதலில் வென்றார்.

 GM கோனரு ஹம்பி (2610)
ஆனால் மற்றொரு போட்டியில், கடந்த போட்டியில் இரண்டாமிடம் பெற்று தற்போது தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கோனரு ஹம்பி உக்ரைனின் ஜுகாவோ நடாலியாவிடம் 37 நகர்த்துதலில் அதிர்ச்சிச்தோல்வி அடைந்தார். அடுத்தமாற்றுப்போட்டியில் வென்றால்தான் ஹம்பி இந்த போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக..


உலக மகளிர் அணி ஸ்குவாஷ்- இந்தியா காலிறுதிக்கு தகுதி..!

ஜோஸ்னா சின்னப்பா
நைம்ஸ் ( ஃப்ரான்ஸ்) :  உலக மகளிர் அணி ஸ்குவாஸ் வாகையர் போட்டியில் இன்று, இந்தியா தன்னைவிட தரவரிசையில் முன்னணியில் இருக்கும் நெதர்லாண்ட்ஸ் அணியை வென்று சாதனை படைத்தது.

முதல் ஆட்டத்தில் இந்தியாவின் அனகா, நெதர்லாந்தின்  மிலொ ஹெஜிடனை 11-8, 11-6, 11-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் அனுபவம் மிக்க, நெதர்லாந்தின் நடாலி க்ரின்ஹம் 11-8, 11-4, 11-3 என்ற புள்ளிக்கணக்கில், இந்தியாவின் தீபிகா பல்லிக்கலை வென்றதால் மூன்றாவது போட்டி மிக முக்கியத்துவம் பெற்றது. மூன்றாவது முக்கியப்போட்டியில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா 5-11, 11-9, 8-11, 11-2, 11-3 என்ற புள்ளிக்கணக்கில் நெதர்லாந்தின்
ஒர்லா நூமை அற்புதமாக வென்று இந்தியாவை காலிறுதிக்கு தகுதிபெறச்செய்தார்.

முதல் மற்றும் இரண்டாவது சுற்றில் ஏற்கனவே இந்தியா, அதைவிட முன்னணியில் இருக்கும் அர்ஜண்டைனா மற்றும் அயர்லாந்தை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.