Saturday 10 November 2012

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் 538 ரன்களில் டிக்ளேர்

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கர்நாடகத்துக்கு எதிராக தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் 168 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 538 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

சென்னையில் நடைபெற்று வரும் இப் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த தமிழகம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. 

2ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் பத்ரிநாத் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் களம் புகுந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அபராஜித், முதல்தர கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து பிரசன்னா களம்புகுந்தார். கார்த்திக்-பிரசன்னா இருவரும் சிறப்பாக விளையாட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வேகமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் சதமடித்தார். தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 538 ரன்களை எட்டியபோது டிக்ளேர் செய்தது. அப்போது தினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 154, பிரசன்னா 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய கர்நாடகம் 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் 478: மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 478 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கனித்கர் 119, சக்சேனா 114 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மும்பை விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது.

லட்சுமண் சதம்: மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் 341 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லட்சுமண் 120 ரன்களும், விகாரி 81 ரன்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய மத்தியப் பிரதேச 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஏடிபி டென்னிஸ் : பூபதி-போபன்னா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்.

போபண்னா - மகேஸ் பூபதி
லண்டன்: ஏடிபி உலக சுற்றுப்போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் இந்திய,  வீரர்களான மகேஸ் பூபதி - ரோஹன் போபன்னா இணை அரையிறுதிக்கு  முன்னேறியது.

இப்போட்டியின் "ஏ' பிரிவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பூபதி - ரோஹன் இணை, தர வரிசையில் இரண்டாமிடத்திலிருக்கும் பெலாரஸ்யன் - கனடிய மேக்ஸ் மிர்ன்யி - டேனியல் நெஸ்டர் இணையை 7-6 (5) 6-7(5) 10-5 என்ற புள்ளிகளில் வீழ்த்தியது. இந்தப்போட்டி கிட்டத்தட்ட 2 மணி நேரம் நீடித்தது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக