Thursday 20 June 2013

உலக மகளிர் ஹாக்கி : இந்திய மகளிர் வெளியேற்றம்.


நாட்டர்டாம், நெதர்லாந்து: உலக மகளிர் ஹாக்கி சுற்றுப்போட்டிகளின் 3 ஆவது போட்டியான  காலிறுதியில் இந்தியா 1-8 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. 

நெதர்லாந்தின் ராட்டெர்டாம் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் இந்திய மகளிர் ஆதிக்கம் செலுத்தினர். எனினும் இந்த ஆதிக்கம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 21-வது நிமிடத்தில் ஆட்டம் நெதர்லாந்தின் வசமானது. தொடர்ந்து அபாரமாக ஆடிய நெதர்லாந்து, 2-வது பாதி ஆட்டத்தை முற்றிலுமாக தன் வசமாக்கியது. இதனால் அந்த அணி 8-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தது. 

வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் கொரியா, ஜெர்மனியையும், நெதர்லாந்து, நியூஸிலாந்தையும் சந்திக்கின்றன. 5 முதல் 8 வரையிலான இடங்களுக்கான ஆட்டத்தில் இந்தியா, ஜப்பானையும், பெல்ஜியம், சிலியையும் சந்திக்கின்றன.
- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

கார்ல்ஸெனிடம் வீழ்ந்தார் ஆனந்த்

மாஸ்கோ: தால் நினைவு சதுரங்க போட்டியின் 5-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மாக்னெஸ் கார்ல்ஸெனிடம் தோல்வி கண்டார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

கறுப்பு காய்களுடன் ஆடிய விஸ்வநாதன் ஆனந்த், மோசமான துவக்க ஆட்டத்தினால் 29 நகர்த்துதலில் தோல்வியை தழுவினார். அதே வேளையில்,
5-வது சுற்றில் இஸ்ரேலின் போரீஸ் கெல்பான்ட், ரஷியாவின் அலெக்ஸôண்டர் மோரோùஸவிச்சை வீழ்த்தினார். தற்போதைய நிலையில் போரீஸ் கெல்பான்ட், அமெரிக்காவின் ஹிகாரா நாகமுரா ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். மாக்னெஸ் கார்ல்ùஸன், அஜர்பைஜானின் சஹாரியர் மமேத்யாரோவ் ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரஷியாவின் டிமிட்ரி ஆன்ட்ரெய்க்கின், இத்தாலியின் ஃபேபியானோ கருணா ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

ஆனந்த், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக், அலெக்சாண்டர் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளனர். 

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக