Sunday 30 December 2012

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இறுதிச் சுற்றில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் இறுதிச்சுற்றில் 4-5 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது இந்தியா.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இப் போட்டியின் இறுதி ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதேபோட்டியில் கடந்த முறை இறுதிச்சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான், தற்போது ஆறுதல் தேடிக்கொண்டது


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Wednesday 26 December 2012

சர்வதேச குத்துச்சண்டை: இந்தியாவுக்கு தங்கம்

அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற அகலாரோவ் கோப்பைக்கான இளைஞர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அமன் இந்தோரா தங்கம் வென்றார்.

56 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தோரா தனது இறுதிச்சுற்றில் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்துஜாபரோவ் அஸிஸ்பெக்கை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். இதுதான் இவர் வென்ற முதல் சர்வதேச பதக்கம். இவர் தேசிய ஜூனியர் நடப்புச் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இந்திய வீரர்கள் சிலம்பரசன் (52 கிலோ எடைப் பிரிவு), கைலாஷ் கில் (75 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இந்தியாவின் அபிஷேக் பெனிவால் (81 கிலோ) வெண்கலம் வென்றார். மொத்தம் 8 பேர் கொண்ட இந்திய அணி இப்போட்டியில் பங்கேற்றது. அதில் 4 பேர் பதக்கம் வென்றுள்ளனர். இதன்மூலம் இப்போட்டியில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்தது


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இண்டைவிற்காக

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: இறுதிச் சுற்றில் இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. 

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுக்குமே கோல் கிடைக்கவில்லை. எனினும் 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதுமே இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங் கோலடித்தார். இதனால் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 

இதையடுத்து பாகிஸ்தானும் கோலடிக்க போராடியது. இதனிடையே 51-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. இந்த கோலை சிங்ளென்சனா அடித்தார். 

அடுத்த 6-வது நிமிடத்தில் (57-வது நிமிடம்) பாகிஸ்தானின் முகமது வகாஸ் கோலடித்தார். 

இதன்பிறகு கடைசி வரை போராடியபோதும் பாகிஸ்தானால் இரண்டாவது கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. 

6 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் இந்தியா பெற்ற 4ஆவது வெற்றி இது. முன்னதாக சீனா, ஜப்பான், ஓமன் அணிகளை இந்தியா வென்றது. இதன்மூலம் 12 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் மலேசியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் புதன்கிழமை (டிச.26) நடைபெறுகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மலேசியா, பாகிஸ்தான் ஆகியவை தலா 7 புள்ளிகளுடன் உள்ளன. 

கடைசி ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து இவ்விரு அணிகளில் ஏதாவது ஒன்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Monday 17 December 2012

சர்வதேச கைபந்து: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

சர்வதேச கைபந்து  சம்மேளன சாம்பியன்ஷிப் (ஐஎச்எஃப்) போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்களின் முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளன. 

நேபாள கைபந்து  சங்கம் சார்பில் நடைபெறும் இப் போட்டி அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் சனிக்கிழமை தொடங்கியது. 

இதில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் இந்தியா, பாகிஸ்தான், யேமன், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் இப்போட்டி நடைபெறுகிறது.

முதல் நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஆடவர் பிரிவில் இந்தியா 43-10 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும், ஆப்கானிஸ்தான் 40-18 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தையும் வீழ்த்தின. 

பாகிஸ்தான் 33-27 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானையும், யேமன் 33-18 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும் வீழ்த்தின. மகளிர் பிரிவு ஆட்டங்களில் இந்தியா 39-18 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும், நேபாளம் 24-6 என்ற புள்ளிகள் கணக்கில் யேமனையும் வீழ்த்தின. 

இதேபோல் வங்கதேசம் 35-15 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானையும், யேமன் 28-11 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தின.

இப் பாட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணிகள் கண்டங்களுக்கு இடையிலான ஐஎச்எஃப் போட்டியின் இரண்டாவது சுற்றில் விளையாட நேரடித் தகுதிபெறும்.


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்தியா சாம்பியன்

மகளிர் உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்தியா 72-12 என்ற புள்ளிகள் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. 

பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிரின் அபார ஆட்டத்துக்கு மலேசிய வீராங்கனைகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. 

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 42-6 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் பெற்ற இந்தியா, இறுதியில் 72-12 என்ற கணக்கில் வெற்றி கண்டது. 

இந்திய அணியில் பிரியங்கா தேவி அதிகபட்சமாக 13 புள்ளிகளைப் பெற்றுத்தந்தார். கோப்பையைக் கைப்பற்றிய இந்தியாவுக்கு ரூ. 51 லட்சமும், 2ஆவது இடத்தைப் பிடித்த மலேசியாவுக்கு ரூ.51 லட்சமும், 3ஆவது இடத்தைப் பிடித்த டென்மார்க் அணிக்கு ரூ.21 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இதை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வழங்கினார். 


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலகக் கோப்பை கபடி: இந்தியா சாம்பியன்

உலகக் கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 3ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா.

3ஆவது உலகக் கோப்பை கபடிப் போட்டி பஞ்சாபின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 16 நாடுகள் பங்கேற்ற இப் போட்டியின் இறுதி ஆட்டம் பஞ்சாபின் லூதியானாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பாகிஸ்தானும், இந்தியாவும் மோதின. 

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீரர்களின் அபார ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தடுமாறியது. இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்தியா 34-9 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இந்திய வீரர்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. இறுதியில் இந்தியா 59-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது. இந்தியத் தரப்பில் ககன்தீப் சீங் 10 புள்ளிகளையும், குர்லால், மன்மிந்தர் சிங் ஆகியோர் தலா 8 புள்ளிகளையும் பெற்றுத்தந்தனர். 

இதுவரை நடைபெற்ற 3 உலகக் கோப்பைகளிலும் இறுதிச்சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானுமே மோதியுள்ளன. மூன்றிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. 

கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.2 கோடியும், 2ஆவது இடத்தைப் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.1 கோடியும், 3ஆவது இடத்தைப் பிடித்த கனடாவுக்கு ரூ.51 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை துணைத் தலைவர் ராணா மசூத் அஹமது, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ராணா சனாவுல்லா உள்ளிட்டோர் இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்தனர். 

அடுத்த ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று சுக்பிர் சிங் அறிவித்தார். மகளிர் அணிக்கு இதுவரை ரூ.51 லட்சம் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியின்போது ஒலிம்பிக்கில் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.  


- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

சூப்பர் சீரிஸ்: அரையிறுதியில் சாய்னா


சீனாவில் நடைபெற்று வரும் பி.டபிள்யூ.எஃப். உலக சூப்பர் சீரிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் சாய்னா நெவால்.

இப் போட்டியின் முதல் 2 ஆட்டங்களில் சாய்னா தோற்றதால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மங்கியது. 

அதனால் கடைசி லீக் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி கண்டால் மட்டுமே சாய்னா அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சாய்னா 21-7, 21-18 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜூலியானே செங்கை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தார்.


- இராஜேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Friday 14 December 2012

சீன ஓபன் சீரீஸ் இறுதிபோட்டி: சாய்னா இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி!

சீனா: சீன ஓபன் சூப்பர் சீரீஸ் இறுதிப்போட்டியின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

புதன்கிழமை நடந்த முதல் போட்டியில் அவர் டென்மார்க்கின், டைன் பான் உடன் ஆடினார். அதில் 14-21, 21-11, 19-21 என்ற புள்ளிக்கணக்கில் சாய்னா தோற்றுப்போனார். இந்த ஆட்டத்தின் முதலில் சற்று சறுக்கிய சாய்னா பின்னர் சுதாரித்து விளையாடினாலும் மீண்டும் சறுக்கி தோற்றுப்போனார். இந்த ஆட்டம் 51 நிமிடங்கள் நீடித்தது.

இந்நிலையில் இரண்டாவது ஆட்டதை கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இன்று தாய்லாந்தின் 17 வயது ரட்சனாக் இண்டனானுடன் மோதினார். இவர்கள் இருவரும் இதுவரை 4முறை விளையாடி இருக்கிறார்கள். அதில் சாய்னா 3 முறையும் ரட்சனாக் ஒரு முறையும் வென்றிருக்கிறார். 2011 சுதிர்மான் கோப்பைக்கு பிறகு சாய்னா இதுவரை இவரிடம் தோற்றதே இல்லை. ஆனால் இன்று ஆட்டம் துவங்கியது முதலே மிகச்சிறப்பாக விளையாடினார் ரட்சனாக். வெறும் 34 நிமிடங்களில் இவர் சாய்னாவை 21-13, 21-16 என்ற நேர் புள்ளிகளில் வென்று அடுத்த சுற்றுக்கு தன்னை தகுதியாக்கிக்கொண்டார். 

நாளை சாய்னா தனது மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் சென்க் ஐ சந்திக்கிறார். இவர்கள் இருவரும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். அதில் சாய்னா 7 போட்டிகளிலும் ஜூலியன் 3 போட்டிகளிலும் வென்றிருக்கின்றனர். இந்த போட்டியில் சாய்னா வென்று, மற்றொரு போட்டியில் டைன் தோற்றால் மட்டுமே சாய்னா அடுத்த சுற்றுக்குத்தகுதி பெற முடியும் என்ற நிலையில், நாளைய ஆட்டத்தில் சாய்னா வெல்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

- இராசேந்திர உடையார்

ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக













Thursday 13 December 2012

உலகக்கோப்பை கபடி: இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

பதிண்டா,பஞ்சாப், இந்தியா: உலகக் கோப்பை கபடிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு  இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.

மூன்றாவது உலகக் கோப்பை கபடிப் போட்டி பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்துள்ள அணிகள் அரையிறுதியில் இன்று சந்தித்தன,

அதன்படி "ஏ' பிரிவில் முதலிடம்பெற்ற இந்தியா, பஞ்சாபின் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 71-23 என்ற புள்ளிகள் கணக்கில் இரானை வீழ்த்தியது. 

மற்றொரு அரையிறுதியில், பாகிஸ்தான் அணி கனடாவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது, சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை சந்திக்கிறது. 


அதேபோல மகளிர் உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது.


-இராசேந்திர உடையார்

ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்க்காக.

Wednesday 12 December 2012

உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா

பஞ்சாப், இந்தியா: உலகக் கோப்பை கபடிப் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

மூன்றாவது உலகக் கோப்பை கபடிப் போட்டி பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்துள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அதன்படி "ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பஞ்சாபின் மான்சாவில் நேற்று நடைபெற்ற தனது கடைசி சுற்று ஆட்டத்தில் 73-28 என்ற புள்ளிகள் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது. 

இந்தியத் தரப்பில் பரம் சிங் 13 புள்ளிகளையும், மன்மிந்தர் சரண், சுக்பிர் சர்வான் ஆகியோர் தலா 11 புள்ளிகளையும் பெற்றுத்தந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதியை உறுதி செய்தது. இதேபோல் ஈரான், கனடா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
நேற்று  நடைபெற்ற மற்றொரு சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 64-21 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியபோதும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

இன்று  (டிச.12) நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா, ஈரானையும், பாகிஸ்தான், கனடாவையும் சந்திக்கின்றன. இதில் வெற்றிபெறும் அணிகள் வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதும். 

அரையிறுதியில் தோல்வியடையும் அணிகள் 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மோதும். இந்த ஆட்டம் நாளை  நடைபெறுகிறது.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Tuesday 11 December 2012



லண்டன், இங்கிலாந்து: லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் ஒன்பதாவது மற்றும் இறுதி  சுற்றில் இன்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சமன் செய்தார்.

நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன்  ஐ எதிர்த்து கருப்புக்காய்களுடன் விளையாடினார் ஆனந்த். ஆட்டம் இறுதிவரை யாருக்கும் சாதகம் இல்லாமலே இருந்தது. ஆனந்த் இரண்டு முறை சமன் செய்ய விரும்பி ஒரே நகர்துதலை செய்த போதும். கார்ல்சனுக்கு அதில் விருப்பமில்லாமல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆடினார். ஆனாலும் அறுபத்தொன்றாவது நகர்துதலில் வெற்றிக்கு வாய்ப்பில்லை என உணர்ந்த கார்ல்சன் ஆட்டத்தை சமனில் முடித்துக்கொள்ள சம்மதித்தார். இந்த சமன் மூலம் ஆனந்த் ஒன்பது ஆட்டங்களில் ஒன்பது புள்ளிகளுடன் ஐந்தாவது இடம் பிடித்தார். கார்ல்சன் பதினெட்டு புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து முதல் பரிசையும் தட்டி சென்றார்.இரண்டாவது பரிசு கிராம்னிக் மற்றும் மூன்றாவது பரிசு நகாமுரா விற்கும் கிடைத்தது. 

- ராசேந்ிரடையார்
ஸ்போர்ட்ஸ் நிூஸ் இந்ியாவிற்காக 

Sunday 9 December 2012

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா தோல்வி!

மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியா 0-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. இதனால் 2ஆவது நிமிடத்திலேயே அந்த அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும் அந்த அணியின் கிறிஸ்டோபர் அதிவேகமாக அடித்ததால், கோல் வாய்ப்பு வீணானது.இதன்பிறகு 5ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் ஜேமி டுவைர், அதை கோலாக்கினார்.ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. இந்த கோலையும் ஜேமி டுவைர்தான் அடித்தார். இதன்பிறகு இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஆஸ்திரேலிய தடுப்பாட்டக்காரர்களிடம் அது எடுபடவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


பின்னர் நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிரென்ட் மிட்டன், இந்திய தடுப்பாட்டக்காரர்களை தாண்டி சிறப்பாக பந்தைக் கடத்தினார். அது சகவீரரான கைரான் கோவர் கையில் கிடைக்கவே கோலானது.ஆஸ்திரேலிய அணி சில தவறுகளை செய்ததால், மேலும் சில கோல் வாய்ப்புகளை இழந்தது. இந்திய அணிக்கு 45ஆவது நிமிடத்தில் கோல் வாய்ப்பு நழுவியது. இறுதியில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.எஸ்.வி.சுனில் உள்ளிட்ட சில இந்திய வீரர்கள் தசைப்பிடிப்புடனேயே விளையாடினர். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 6 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்புகூட கிடைக்கவில்லை.



-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக.

Saturday 8 December 2012

லண்டன் கிளாசிக் செஸ்: ஆனந்த் ஆறாவது சுற்றில் தோல்வி!

லண்டன், இங்கிலாந்து: லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் ஆறாவது சுற்றில் இன்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார்.

இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் ஐ எதிர்த்து வெள்ளைக்காய்களுடன் விளையாடினார் ஆனந்த். ஆனந்த் ஆட்டத்தின் 41 ஆவது நகர்த்துதலில் செய்த ஒரு பெரிய தவறு அவரை தோல்வி அடைய வைத்தது. அதுவரை எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்று எண்ணியிருந்த அவரது ரசிகர்களுக்கு அவருடைய ஆட்டம் மிகுந்த வியப்பை அளித்தது,. அதைத்தொடர்ந்து 2 நகர்த்துதல்களில் ஆனந்த் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். லண்டன் போட்டியில் ஆனந்த் அடையும் முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வியின் மூலம் ஆனந்த் 6 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் இருக்கிறார். ஏழாவது சுற்றில் அவர் உலகின் சிறந்த பெண் போட்டியாளர் ஜுதித் போல்கர் உடன் விளையாட இருக்கிறார். 


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Friday 7 December 2012

உலக இளையோர் குத்துச்சண்டை: இந்தியாவிற்கு இரண்டு வெண்கலம்!

ஏராவன், ஆர்மேனியா: ஆர்மேனியாவில் நடைபெற்று வரும் இளையோர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சந்தீப் சர்மா, ரஷியாவின் மகமூத் மத்யூவிடம்  9-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி கண்டார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

49 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லலிதா பிரசாத் 8-13 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் எல்.வி. பின்னிடம் தோல்வி கண்டார். இதனால் இவருக்கும் வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

91 கிலோ எடைப்பிரிவில்  நரேந்தர் பெர்வால் இன்று  அரையிறுதியில், ஜெர்மனியின்  ஃப்ளொரியன் ஸ்சூல்ஸ் ஐ எதிர்த்து களமிறங்குகிறார்.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

லண்டன் கிளாசிக் செஸ்: ஆனந்த் ஐந்தாவது சுற்றில் வெற்றி!

விஸ்வநாதன் ஆனந்த், படம் உதவி: Ray Morris-Hill
லண்டன், இங்கிலாந்து: லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் ஐந்தாவது சுற்றில் இன்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.

இங்கிலாந்தின் கெவின் ஜோன்ஸ் ஐ எதிர்த்து கருப்புக்காய்களுடன் விளையாடினார் ஆனந்த். கெவின் ஆட்டத்தின் பதினாலாவது நகர்த்துதலில் செய்த ஒரு சிறு தவறை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆனந்த், மிக விரைவிலேயெ ஒரு குதிரையை வீழ்த்தினார்.21 ஆவது நகர்த்துதலில் வெற்றியை முழுவதுமாக உறுதி செய்து 29 ஆவது நகர்த்துதலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் லண்டன் செஸ் போட்டியில் முதல் வெற்றியைப் பெற்று, ஐந்து சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 6 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் இருக்கிறார் ஆனந்த். ஆறாவது சுற்றில் அவர் இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் ஐ சந்திக்கிறார்.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 6 December 2012

லண்டன் கிளாசிக் செஸ் : நேரலை

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா அரையிறுதிக்கு தகுதி!

மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு இந்திய ஆடவர் ஹாக்கி தகுதி பெற்றிருக்கிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 


ஆட்டம் துவங்கியது முதலே இந்திய அணி சுறுசுறுப்பின்றி விளையாடியது. கடந்த மூன்று ஆட்டங்களில் இருந்த வேகம் இன்று இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவின் களமுனை, இடது பக்கத்தில் மிகப்பலவீனமாக இருந்தது.தடுப்பாட்டத்திலும் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை. அதனால் மொத்தமாக 6 பெனல்டி கார்னர் வாய்ப்புகள் பெல்ஜியத்திற்க்கு கிடைதது. ஆனால் இந்திய கோல் காப்பாளர், பி.டி.ராவின் மிகச்சாதுர்யமான தடுப்பு, இந்தியாவை 6 முறையும் அணை போல் காத்தது என்றால் அது மிகையில்லை.களப்பணியிலும் இந்தியா இன்று சிறப்பாக செயல்பட்டது என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவின் முன்கள வீரர் சாண்டி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் இருந்தபோது மஞ்சள் அட்டை பெற்று வெளியேறினார். ரகுநாத் இரண்டுமுறை எச்சரிக்கை செய்யப்பட்டார்.முதல் பாதியில் வெறும் 29 விழுக்காடு நேரமே, இந்திய வீரர்கள் பந்தை தன் வசம் வைத்திருந்தனர். இரண்டாவது பாதியில் இந்தியா பல முன்களப்பணி வாய்ப்புகளைத்தவறவிட்டது. தொழில்நேர்த்தி மிக்க அணி போல இந்தியா ஆடவில்லை.இந்த வேளையில், இந்தியா 1982 ஆம் ஆண்டிற்க்கு பிறகு இப்போதுதான் முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்பதும், 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு இப்போதுதான் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் மிகச்சிறப்பான நேரம் என்றால் அது திம்மையா அடித்த கோல் நிமிடம் மட்டுமே. அதிர்ஷ்டவசமாக அதற்குப்பின் பெல்ஜியம் எந்த கோலையும் அடிக்கமுடியவில்லை. இன்றைய ஆட்டம் போல ஆடினால் அரையிறுதியில் இந்தியா வெல்லுமா என்பது ஐயமே. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெல்லும் அணியுடன் இந்தியா அரையிறுதியில் விளையாட இருக்கிறது.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Wednesday 5 December 2012

லண்டன் கிளாசிக் செஸ்: நான்கு சுற்றுகளிலும் ஆனந்த் சமன்..!

லண்டன், இங்கிலாந்து: லண்டன் கிளாசிக் செஸ் ஒலிம்பியா கடந்த முதல் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கின்றன.  முதல் சுற்றில் பை மூலம் வெளியில் இருந்த ஆனந்த், இரண்டாவது சுற்றில் இங்கிலாந்தின் லூக் மக்சேனுடன், வெள்ளைக்காய்களுடன் விளையாடினார். இதில் மிக மோசமாக ஆடிய ஆனந்த அதிர்ஷ்டவசமாக 108 நகர்த்துதல்களில் சமன் செய்தார். மூன்றாவது சுற்றில் அவர் அர்மீனியாவின் உலகின் இரண்டாம் நிலை வீரர், லெவான் அரோனியனுடன் விளையாடினார். இதில் ஆனந்த் வெற்றி பெற பல வாய்ப்புகள் இருந்தும் அனைத்தையும் தவறவிட்டார். அரோனியன் பின்னர் சிறப்பாக விளையாடி தோல்வியைத்தவிர்த்து போட்டியை சமன் செய்தார்.

நான்காவது சுற்றில் ஆனந்த், முன்னாள் உலக வாகையர் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் உடன் மோதினார்.இதிலும் 40 நகர்த்துதல்களில் ஆட்டத்தை சமனில் முடித்துக்கொள்ள இருவரும் சம்மதித்தனர். இதனால் 4 சுற்றுகளின் முடிவில் 3 புள்ளிகளுடன் ஆனந்த் 6 ஆம் இடத்தில் இருக்கிறார்.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா தகுதிச்சுற்றில் முதலிடம்.




Sunday 2 December 2012

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா இரண்டாவது போட்டியில் வெற்றி!

ரகுநாத் பெனல்டி கார்னர் மூலம் கோல் அடிக்கிறார்
மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி போட்டி 'ஏ' பிரிவில், இந்தியா தனது இரண்டாவது போட்டியில்நியூசிலாந்து அணியை சந்தித்தது.

ஆட்டத்தின் துவக்கத்திலேயே, இந்தியாவின் ருபீந்தர் தனது வலைக்குள்ளேயே பந்தை அடித்து நியூசிலாந்துக்கு ஒரு கோல் முன்னனி கொடுத்தார். முதல் பத்து நிமிடத்திற்க்குள்ளாகவே பின்னடைவை சந்தித்த போதும், இந்திய இளம்  வீரர்களின் ஆட்டம்,காண்பதற்க்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மிகவேகமான மற்றும் தந்திரமான ஆட்டம், இந்திய ஹாக்கியின் இழந்த பொற்காலத்தை நினைவூட்டுவதாக இருந்தது. இதைப்போல விளையாடித்தோற்றாலும் அது நிச்சயம் மகிழ்வூட்டுவதாகவே இருக்கும்.

ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் இந்தியாவின், ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடித்து 1-1 என்று சமன் செய்தார். அடுத்த நான்கு நிமிடத்தில் குர்விந்தர் சிங் மற்றொரு அற்புதமான கோல் அடித்து 2-1 என்று முன்னிலை கொடுத்தார். பின்னர் 25 ஆவது நிமிடத்தில் ரகுநாத் பெனல்டி கார்னர் மூலம் மற்றொரு கோல் அடித்து 3-1 என்று முன்னிலையை அதிகப்படுத்தினார். பின்னர் 65 ஆவது நிமிடத்தில் டானிஷ் முஜ்தபா மற்றொரு கோல் அடித்து 4-1 என்று அசைக்க முடியாத முன்னிலை கொடுத்தார். பின்னர் ஆட்டம் முடிவடையும் தருவாயில், 85 ஆவது நிமிடத்தில், நியூசிலாந்தின் வில்சன் ஒரு கோல் அடித்தாலும் அது ஆட்டத்தின் முடிவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் இந்தியா 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. நாளை இந்தியா, ஜெர்மனியை சந்திக்கிறது.

-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா முதல் போட்டியில் வெற்றி!

மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று துவங்கின. இதில் 'ஏ' பிரிவில், இந்தியா தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை சந்தித்தது. 

ஆட்டத்தின் துவக்கத்திலேயே இங்கிலாந்து, ரிச்சர்ட் ஸ்மித் தின் பெனல்டிக் கார்னர் மூலம் ஒரு கோல் போட்டு முன்னனி பெற்றது. ஆனால் அதற்குபிறகு சுதாரித்துக்கொண்டு ஆடிய இந்திய இளம் அணி,  22 ஆவது நிமிடத்தில் டேனிஷ் முஜ்தபா மூலமும், 38 ஆவது நிமிடத்தில் யுவராஜ் வால்மீகி மூலமும் பின்னர் 66 ஆவது நிமிடத்தில் குர்விந்தர் சிங் மூலமும் மூன்று கோல்களை அடித்து 3-1 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 2012 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில், கடைசி இடத்தை மட்டுமே பிடித்ததால் இந்திய அணியிலிருந்து மூத்த வீரர்கள் நீக்கப்பட்டு, இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டபின், இந்திய அணி ஆடும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டியில் இந்தியா, நியூலாந்தை சந்திக்கிறது. மற்றொரு 'ஏ' பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனி, நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 29 November 2012

ஹாங்காங் ஓபன் ஸ்குவாஷ் : 2ஆவது சுற்றில் தீபிகா பலிக்கல்

தீபிகா பலிக்கல்
ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் 2ஆவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் முன்னேறியுள்ளார்.

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் இப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் முதல் சுற்றில் தீபிகா பலிக்கல் 7-11, 11-6, 11-1, 11-5 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லியூ லிங்கை வீழ்த்தினார். தீபிகா தனது இரண்டாவது சுற்றில் இங்கிலாந்தின் ஜென்னி டங்கால்ஃபை சந்திக்கிறார். 

ஆடவர் பிரிவு தகுதிச்சுற்றின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சித்தார்த் 6-11, 4-11, 4-11 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ரியான் சஸ்கெல்லியிடம் தோல்வி கண்டார். முன்னதாக சித்தார்த், தனது முதல் தகுதிச்சுற்றில் 11-6, 11-2, 11-5 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் அலெக்ஸ்சை  தோற்கடித்தார்.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Sunday 25 November 2012

உலக மகளிர் செஸ் வாகையர்: ஹரிகா வெண்கலம் வென்றார்

கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தின் இரண்டாவது போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா, பல்கேரியாவின் அண்டனேடா ஸ்டெஃபனோவா உடன் வெள்ளை காய்களுடன் விளையாடினார். இதில் ஹரிகா சமன் செய்தார். முதல் ஆட்டத்தில் அண்டனேடா ஸ்டெஃபனோவா ஒரு புள்ளி பெற்றிருந்ததால், நேற்று பெற்ற அரைப்புள்ளியோடு,அவர் 1.5 ( 1+0.5) புள்ளிகள் பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் . ஹரிகா தோல்வியை தழுவினார்.இதனால் ஹரிகா உலக வாகையர் பட்டத்தின் வெண்கலப்பதக்கத்தைக்கைப்பற்றி இருக்கிறார். வாழ்த்துகள் ஹரிகா. விரைவில் சீனாவில் சந்திக்கலாம்..

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Friday 23 November 2012

உலக மகளிர் செஸ் வாகையர்: ஹரிகா அரையிறுதி முதல் ஆட்டத்தில் தோல்வி!

கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தின் முதல் போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா, பல்கேரியாவின் அண்டனேடா ஸ்டெஃபனோவா  உடன் கருப்பு காய்களுடன் விளையாடினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹரிகா ஆட்டத்தின் 25 ஆவது நகர்த்துதலில் குதிரையை ஒரு சிப்பாய்காக இழந்தார். பின்னர் நேர நெருக்கடியும் இணைந்து கொள்ள தொடர்ந்து மோசமாக விளையாடத்தொடங்கினார். இதானால் 39 நகர்த்துதலில் ஹரிகா தோல்வியை ஒப்புக்கொள்ள நேரிட்டது. நாளை அவர் வெள்ளைக் காய்களுடன் விளையாடுவார்.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ் வாகையர்: நேரலை

ஹாங்காங் ஓபன்: இந்தியா ஒட்டுமொத்த தோல்வி!

கவ்லூன், ஹாங்காங்: இங்கு நடைபெற்ற உலக சீரீஸ் ஓபன் இறகுப்பந்து போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட அனைத்து வீரர்கள், வீராங்கனைகளும் இரண்டாவது சுற்றிலேயெ தோற்று வெளியேறிவிட்டனர். இதில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை சாய்னா நெஹ்வாலும் அடக்கம் என்பது வருத்தத்திற்குரியது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 22 November 2012

பன்னாட்டு சூப்பர் சீரீஸ் ஹாக்கி: இந்தியா முதல் போட்டியில் தோல்வி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டி
பெர்த், ஆஸ்திரேலியா: லான்கோ பன்னாட்டு ஒன்பது பேர் சூப்பர் சீரீஸ் ஹாக்கி போட்டிகள் இன்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கோலாகலமாக துவங்கின. முதல் போட்டியில் புத்துணர்வு பெற்ற இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மோதியது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்தியாவின் குர்விந்தர் சிங் ஒரு கோல் அடித்து இந்தியாவிற்க்கு முன்னணி தந்தார், ஆனால் இங்கிலாந்தின் டேனியல் ஃபாக்ஸ் மற்றும் டேவிட் கண்டன் ஆகிய இருவரும் ஆளுக்கு ஒரு கோல் போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வெற்றி பெறச்செய்தனர். இந்தியா ஆஸ்திரேலியாவை நாளையும், பாகிஸ்தானை சனிக்கிழமையும் சந்திக்க இருக்கிறது.



-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ் வாகையர். அரையிறுதிக்கு ஹரிகா தகுதி!

த்ரோனவல்லி ஹரிகா Vs சாவோ சூ
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. காலிறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் ஒவ்வொருவரும் தன் எதிராளியுடன் இரண்டு ஆட்டங்கள் ஆட வேண்டும். ஒன்று வெள்ளைக்காய்களுடன் மற்றொன்று கறுப்புக்காய்களுடன். இதில் நேற்று கருப்பு காய்கள்டன் ஆடிய ஹரிகா பல தவறுகள் செய்தபோதும், சீனாவின் சூ சாஓ ஆட்டத்தை சமன் செய்கிற அளவில் மோசமாக ஆடி அரை புள்ளியுடன் திருப்தி அடைந்தார். அதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற மாற்று ஆட்டத்தில் ஹரிகா வெள்ளைக்காய்களுடன் ஆடினார். ஆனால் இன்று பெரிதாக எந்த தவறையும் செய்யாமல் ஆடியதால் இரண்டாவது ஆட்டமும் சமநிலையில் முடிந்தது, எனவே, இரண்டு ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளியை பெற்று சம நிலையில் இருந்தனர். அதனால் இன்று டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டி இருந்தது. முதல் ஆட்டத்தில் வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஹரிகா எளிதில் ஆட்டத்தை சமன் செய்தார்.இதனால் இரண்டாவது ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.கறுப்பு காய்களுடன் ஆடினாலும் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஹரிகா 33 ஆவது நகர்த்தலில் வென்றார். இதன் மூலம் ஹரிகா உலக மகளிர் செஸ் வாகையர் பட்டத்துக்கான அரை இறுதியில், பல்கேரியாவின் அன்டொனேடா ஸ்டெஃபனாவாவை எதிர்த்து விளையாட தகுதி பெற்று இருக்கிறார். மற்றொரு அரை இறுதியில் உக்ரைனின் அன்னா உஷெனினா சீனாவின் ஜு வெஞ்ஜுனை எதிர்த்து களமிறங்குகிறார். இனிவரும் ஆட்டங்களிலாவது சிறப்பாக ஆடுவாரா ஹரிகா? பொருத்திருந்து பார்க்கலாம்.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ் வாகையர். காலிறுதியில் ஹரிகா சமன்!



த்ரோனவல்லி ஹரிகா Vs சாவோ சூ ஆட்டம்!
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தின் மாற்றுப்போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா, சீனாவின் சாவோ சூ உடன் வெள்ளைக்காய்களுடன் விளையாடினார். சிறப்பான துவக்கத்தைப்பெற்ற ஹரிகா 17 வது நகர்த்துதலில் செய்த தவறால் வெற்றியை கோட்டை விட்டார். மேலும் பல தவறுகளைத்தொடர்ந்து செய்து கொண்டிருந்த ஹரிகா இரண்டு சிப்பாய்களை இழந்து பரிதாமாக இருந்த நிலையில், சீனாவின் சாவோ சூ செய்த சிறுபிள்ளைத்தனமான தவறு ஆட்டத்தை சமனில் முடிக்கும் வாய்ப்பை ஹரிகாவிற்க்கு கொடுத்தது. இதானால் இந்த ஆட்டம் 70 நகர்த்துதல்களில்  எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது. நாளை டை பிரேக் ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஹாங்காங் ஓபன் : முதல் சுற்றில் சாய்னா வெற்றி!

கவ்லூன், ஹாங்காங்: உலக சூப்பர்சீரீஸ் ஹாங்காங் ஓபன் இறகுப்பந்து போட்டி இன்று கவ்லூன் நகரில் துவங்கியது. முதல் சுற்றுப்போட்டிகளில் இந்தியாவிற்க்கு இன்று வெற்றிகள் குறைவாகவும் தோல்விகள் அதிகமாகவும் கிடைத்தன.

காலையில் முதலில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தருண் கோனா மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை சீனாவின் சூ சென் மற்றும் மா ஜின் இணையிடம் 15-21, 16-21 என்ற நேர் புள்ளிகளில் , முப்பது நிமிடத்தில் தோற்றது.அடுத்து நடைபெற்ற மற்றுமொரு கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ப்ரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் சிக்கி ரெட்டி இணை அமெரிக்காவின் ஃபிலிப் சூவ் மற்றும் ஜெமி சுமந்தி இணையை 21-19,21-15 என்ற நேர் புள்ளிகளில், 24 நிமிடங்களில் வென்றது.

பின்னர் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் இந்தோனேசியாவின் அப்ரில்லா யுசுந்தரியை 22-20, 21-8 என்ற நேர் புள்ளிகளில் 33 நிமிடங்களில் வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் இவர் சீனாவின் வாங் லின் உடன் நாளை மோத இருக்கிறார்.

ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தருண் கோனா மற்றும் அருண் விஷ்ணு இணை இங்கிலாந்தின் க்ரிஸ் அட்காக் மற்றும் அண்ட்ரூ எல்லீஸ் இணையிடம் 18-21, 14-21 என்ற நேர் புள்ளிகளில் தோற்றது. இந்த ஆட்டம் சுமார் 31 நிமிடங்கள் நீடித்தது.

ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜயராம், சீனாவின் வாங் ஷெங்மின்னை  22-20,23-21 என்ற புள்ளிக்கணக்கில் கடுமையாகப் போராடி வென்றார். 35 நிமிடங்கள் இந்தப்போட்டி நடைபெற்றது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் காஷ்யப் பாருபள்ளி, உலகின் ஏழாம் நிலை வீரர், டென்மார்க்கின் ஜேன் ஓ ஜோர்கென்சனை 24-22, 20-22, 22-20 என்ற புள்ளி கணக்கில் கடும் போராட்டத்துக்குப்பின் வென்றார். இரண்டாவது ஆட்டதில் காஷ்யப் 19-15 என்ற முன்னிலை பெற்றிருந்தபோதும் 20-22 என்ற புள்ளிக்கணக்கில் அந்த ஆட்டத்தை இழந்ததால் மூன்றாவது ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. இந்த ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ஃப்ரான் குர்னியவன் மற்றும் செண்டி புஷ்பா இராவதி இணை இந்தியாவின் அக்ஷய் திவால்கர் மற்றும் ப்ரத்னியா கத்ரே இணையை 21-18, 23-21 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ரிக்கி விடியண்ட்டோ மற்றும் புஷ்பிதா ரிசி திலி இணை இந்தியாவின் அருண் விஷ்ணு மற்றும் அபர்ணா பாலன் இணையை 21-13, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின்  நாளைய நட்சத்திரம், பி.வி.சிந்து இந்தோனேசியாவின் பெலேட்ரிக்ஸ் மனுபுடி யிடம் 12-21,21-18,15-21 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறினார்.

ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தோனேசியாவின் ஆல்வண்ட் யுலியண்டோ சந்த்ரா மற்றும் மார்கிஸ் கிடோ இணை இந்தியாவின் மனு அத்ரி மற்றும் சுமீத் ரெட்டி இணையை 11-21,21-11,21-15 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.மற்றொரு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ப்ரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் அக்சய் திவால்கர் இணை இந்தோனேசியாவின் ஹஃபிஸ் ஃபைசல் மற்றும் புத்ரா இகா ரோமா இணையை 21-16, 21-23, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குத்தகுதி பெற்றது.

பெண்கள் இரட்டையர் போட்டியில் சீனாவின் வாங் சியோலி மற்றும் யூ யங் இணை இந்தியாவின் அபர்ணா பாலன் மற்றும் சிக்கி ரெட்டியை வெறும் பதினைந்தே நிமிடங்களில் 21-3, 21-7 என்று எளிதில் வீழ்த்தியது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ப்ரத்னவா கத்ரே மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை ஃப்ரான்ஸ் நாட்டின் ஆட்ரே ஃபோண்டைன் மற்றும் எமிலி லீஃபல் இணையை 21-10, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக



Tuesday 20 November 2012

ஹாங்காங் ஓபன் இன்று தொடக்கம்: சாய்னா பங்கேற்பு

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் புதன்கிழமை தொடங்குகிறது. 

இந்திய வீராங்கனை சாய்னா நெவால் இப் போட்டியில் பங்கேற்கிறார்.  முழங்கால் காயம் காரணமாக கடந்த வாரம் நடைபெற்ற சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இருந்து விலகிய சாய்னா, மீண்டும் களத்தில் குதித்துள்ளார். 

ஹாங்காங் ஓபனில் சாய்னா தனது முதல் சுற்றில் இந்தோனேசியாவின் அப்ரில்லாவை சந்திக்கிறார். தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள சாய்னா, இதற்கு முன்னர் இருமுறை அப்ரில்லாவை வீழ்த்தியுள்ளார். 

சாய்னா தனது காலிறுதிச் சுற்றில் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள சீனாவின் யாஞ்ஜியோ ஜியாங்கை
சந்திப்பார் என்று தெரிகிறது. சாய்னாவும், ஜியாங்கும் இதற்கு முன்னர் 5 முறை மோதியுள்ளனர். அனைத்திலும் ஜியாங்கே வெற்றி கண்டுள்ளார். 

இப் போட்டியில் சாய்னா தவிர, ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் லீ ஸியூரூய், டென்மார்க்கின் டின் பான் உள்ளிட்டோரும் இப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் பி.வி.சிந்துவும் இப் போட்டியில் பங்கேற்றுள்ளார். இவர் தனது முதல் சுற்றில் இந்தோனேசியாவின் பெலட்ரிக்ûஸ சந்திக்கிறார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப், அஜய் ஜெயராம் ஆகியோர் பங்கேற்கிறார்கள். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அக்ஷய்-பிரதன்யா, அருண்-அபர்ணா ஜோடிகள் பங்கேற்கின்றனர்.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Monday 19 November 2012

மகளிர் உலக வாகையர் செஸ்: ஹரிகா நான்காவது சுற்றுக்குத்தகுதி!

த்ரோனவல்லி ஹரிகா (2512) - லெலா ஜவகிஸ்விலி (2455)
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.இன்று நடந்த மூன்றாவது  சுற்றுப்போட்டியின் மாற்று ஆட்டத்தில், வெள்ளைக் காய்களுடன் விளையாடிய இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா ஜார்ஜியாவின் லெலா ஜவகிஸ்விலியாவை 47 நகர்த்துதலில் வென்றார். இதன்  மூலம் மூன்றாவது சுற்றில் 1.5-0.5 என்ற புள்ளிக்கணக்கில் ஹரிகா வென்று நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.

-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ்: ஹரிகா மூன்றாவது சுற்றில் சமன் செய்தார்.!

த்ரோனவல்லி ஹரிகா
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த மூன்றாவது  சுற்றுப்போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா ஜார்ஜியாவின் லெலா ஜவகிஸ்விலி இடையேயான ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில், கடந்தமுறை இரண்டாமிடம் பெற்ற இந்தியாவின் ஹம்ப்பி, முதலிடம் பெற்ற  சீனாவின் யிஃபான் ஹோ, மூன்றாமிடம் பெற்ற ஸ்லோவெனியாவின் அன்னா முஷிசுக் ஆகிய மூவரும் வெளியேறிவிட்டதால், யார் வாகையர் பட்டத்தை வெல்வார் என்பது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

தற்போதைக்கு சீனாவின் ஸாஓ சியு முன்ன்னியில் இருக்கிறார்,


-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

ஜொஹொர் ஹாக்கி: இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வி!

ஜொஹார் பாரு, மலேசியா: இந்திய இளையோர் அணி,ஜொஹார் பாரு சுல்தான் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.

சுற்றுப்போட்டிகளில் தோல்வியே அடையாமல் சிறப்பாக விளையாடிவிட்டு, இறுதிப்போட்டியில் தோற்றுப்போனது இந்தியா.

ஜெர்மனியின் ஜொனஸ் கொமால் ஆட்டத்தின் பதினோராவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். பின்னர் 24 வது நிமிடத்தில் இந்தியாவின் சத்பீர் சிங் ஒரு கள கோல் அடித்து அதனை சமன் செய்தார். பின்னர் 30 ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜொசுவா டெலர்பெர் பெனல்டி கார்னர் மூலம் மற்றொரு கோல் அடித்து 2-1 என்ற முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெர்மனி ஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து 3-1 என்று முன்னிலை பெற்றது. இந்த முறை கோல் அடித்தவர் ஜெர்மனியின் ஃப்ளோரியன் அட்ரியன்ஸ்.

பின்னர் ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்த போது, இந்தியாவின் ஆகாஷ் தீப் ஒரு கோல் அடித்து 3-2 என்று முன்னிலையை குறைத்தாலும், அது வெற்றிக்கோ அல்லது கூடுதல் நேரம் பெறுவதற்க்கோ உதவவில்லை.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு நடைப்பெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது.


- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Saturday 17 November 2012

சீன இறகுப்பந்துப்போட்டி: காலிறுதியில் காஷ்யப் தோல்வி.

சாங்காய், சீனா: முன்னாள் உலக் இளைய வாகையர், சீனாவின் வாங் ஷெங்மிங், சீன இறகுப்பந்து காலிறுதியில் இந்தியாவின் காஷ்யப்பை 21-17, 21-7 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக
 

மகளிர் உலக ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா தோல்வி

தீபிகா பல்லிக்கல்
நைம்ஸ் ( ஃப்ரான்ஸ்) :  உலக மகளிர் அணி ஸ்குவாஸ் வாகையருக்கான காலிறுதிப்போட்டியில், இந்தியா, தரவரிசையில் இரண்டாமிடத்திலிருக்கும் எகிப்து அணியிடம் தோல்வியடைந்தது.
 
உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை, எகிப்தின் ரனீம் எல் வெலைய்லி மற்றும் எட்டாம் நிலை வீராங்கனை நூர் எல் செர்பினி ஆகியோர் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஜோஸ்னா சின்னப்பாவை 3-0 என்ற நேர் புள்ளிகளில் வென்று, அரை இறுதிக்கு எகிப்து அணியை தகுதி பெறச்செய்தனர்.

எகிப்து அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது, மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து, மூன்றாம் நிலை அணியான மலேசியாவை சந்திக்கிறது.

- இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.

Friday 16 November 2012

சீன இறகுப்பந்து: காஷ்யப் காலிருதிக்கு தகுதி!

காஷ்யப்
சாங்காய், சீனா: சீன ஓபன் இறகுப்பந்து போட்டியின் காலிருதிச்சுற்றுக்கு இந்தியாவின் காஷ்யப் தகுதி பெற்றிருக்கிறார். 

அவர் நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்றில், தரவரிசையில் 7 ஆம் இடத்திலிருக்கும் வியட்நாமின்  டியன் மின் நுயென்னை  12-21, 22-20, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, காலிருதிச்சுற்றுக்குத்தகுதி பெற்றிருக்கிறார்.


-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

ஜொஹார் ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா..!

ஜொஹார் பாரு, மலேசியா: சுல்தான் கோப்பைக்கான ஜொஹார் ஹாக்கியில், இன்று இந்தியா, நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றில் நுழைந்திருக்கிறது..

நான்கு போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்திலிருக்கிறது. இதற்கு முந்திய போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி அணிகளை வென்றும், பாகிஸ்தானுடன் சமன் செய்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 15 November 2012

கொனெரு ஹம்பி தோல்வி. போட்டியிலிருந்து வெளியேறினார்..

கொனெரு ஹம்பி(2610), சுகோவா நாடியாலா(2451)
கன்ட்டி மன்ஷிஸ்க், ரஷ்யா: உலக செஸ் மகளிர் வாகையர் பட்டத்திற்கான இரண்டாம் சுற்று மாற்று ஆட்டத்திலும் இந்தியாவின் கொனெரு ஹம்பி தோல்வியை தழுவியதால் போட்டியிலிருந்தே வெளியேற்றப்பட்டிருக்கிறார். இவர் உக்ரைனின் நாடியாலா சுகோவாவிடம் 43 நகர்த்துதலில் கருப்பு காய்களுடன் தோற்றுப்போனார், 

ஆனால் இந்தியாவின் மற்றொரு நட்சத்திரம் த்ரோனவல்லி ஹரிகா மாற்று ஆட்டத்தில் எளிதில் சமநிலை செய்து அடுத்த சுற்றுக்குத்தகுதி பெற்றிருக்கிறார்.

-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

ஜொஹார் ஹாக்கி: இந்திய- பாகிஸ்தான் ஆட்டம் சமன்..

மலேசியாவில் நடைபெற்று வரும்ஜோஹர் ஹாக்கி கோப்பை போட்டியின் லீக் சுற்றில், இந்தியாவிற்க்கும், பாகிஸ்தானிற்க்கும் இடையிலான ஆட்டம், எத்தரப்பிற்க்கும் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

புதன்கிழமை நடைபெற்ற லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இப்போட்டியில், இறுதிவரை இரு அணிகளும் கோல் போடாததால், ஆட்டம் சமனில் முடிந்தது. முன்னதாக நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவை 2-0 என்ற புள்ளிக்கணக்கிலும், ஜெர்மனியை 3-1 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தியது. இதன் மூலம் தற்போது 7 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.

மற்றொரு போட்டியில் மலேசியா, நியூசிலாந்து அணியிடம் 5-2 என்ற புள்ளிக்கணக்கில் படுதோல்வி அடைந்தது.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ்: ஹரிகா வெற்றி! ஹம்பி தோல்வி!

GM த்ரோனவல்லி ஹரிகா (2512)
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த இரண்டாவது சுற்றுப்போட்டிகளில் இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா அர்மெனியாவின் எலினா டெனியெலியனை 33 நகர்த்துதலில் வென்றார்.

 GM கோனரு ஹம்பி (2610)
ஆனால் மற்றொரு போட்டியில், கடந்த போட்டியில் இரண்டாமிடம் பெற்று தற்போது தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கோனரு ஹம்பி உக்ரைனின் ஜுகாவோ நடாலியாவிடம் 37 நகர்த்துதலில் அதிர்ச்சிச்தோல்வி அடைந்தார். அடுத்தமாற்றுப்போட்டியில் வென்றால்தான் ஹம்பி இந்த போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக..


உலக மகளிர் அணி ஸ்குவாஷ்- இந்தியா காலிறுதிக்கு தகுதி..!

ஜோஸ்னா சின்னப்பா
நைம்ஸ் ( ஃப்ரான்ஸ்) :  உலக மகளிர் அணி ஸ்குவாஸ் வாகையர் போட்டியில் இன்று, இந்தியா தன்னைவிட தரவரிசையில் முன்னணியில் இருக்கும் நெதர்லாண்ட்ஸ் அணியை வென்று சாதனை படைத்தது.

முதல் ஆட்டத்தில் இந்தியாவின் அனகா, நெதர்லாந்தின்  மிலொ ஹெஜிடனை 11-8, 11-6, 11-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் அனுபவம் மிக்க, நெதர்லாந்தின் நடாலி க்ரின்ஹம் 11-8, 11-4, 11-3 என்ற புள்ளிக்கணக்கில், இந்தியாவின் தீபிகா பல்லிக்கலை வென்றதால் மூன்றாவது போட்டி மிக முக்கியத்துவம் பெற்றது. மூன்றாவது முக்கியப்போட்டியில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா 5-11, 11-9, 8-11, 11-2, 11-3 என்ற புள்ளிக்கணக்கில் நெதர்லாந்தின்
ஒர்லா நூமை அற்புதமாக வென்று இந்தியாவை காலிறுதிக்கு தகுதிபெறச்செய்தார்.

முதல் மற்றும் இரண்டாவது சுற்றில் ஏற்கனவே இந்தியா, அதைவிட முன்னணியில் இருக்கும் அர்ஜண்டைனா மற்றும் அயர்லாந்தை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- இராசேந்திர உடையார்,
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.

Wednesday 14 November 2012

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக, கர்நாடக ஆட்டம் டிரா: தில்லி, அசாம், பஞ்சாப் வெற்றி

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழகம், கர்நாடக அணிகளுக்கிடையேயான போட்டி டிராவானது.

சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி 168 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 538 ரன்கள் குவித்த டிக்ளேர் செய்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 154 ரன்களும், அபராஜித் 112 ரன்களும் எடுத்தனர்.

கர்நாடக அணித் தரப்பில் ராஜு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய கர்நாடக அணி 4ஆம் ஆட்ட நேர முடிவில் 187.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் சேர்த்தது. கர்நாடக அணியில் அதிக பட்சமாக கணேஷ் சதீஷ் ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்தார். அவர் 1 சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். 

சிறப்பாக விளையாடிய முரளிதரன் கெüதம் ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் எடுத்தனர். தமிழக அணித் தரப்பில் ரங்கராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்úஸ முடிவடையாத நிலையில், 4 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி ஆட்டம் டிராவானது.

தமிழக அணியை விட கர்நாடக அணி கூடுதலாக ரன்கள் எடுத்ததினால் கர்நாடகத்துக்கு 3 புள்ளிகளும், தமிழகத்துக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டன.

தில்லி, அசாம், பஞ்சாப் வெற்றி: ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 143 ரன்களில் ஒடிசா அணி ஆட்டமிழந்தது. பின்னர் பேட் செய்த தில்லி அணி 331 ரன்கள் எடுத்தது.

தனது 2ஆவது இன்னிங்ûஸத் தொடங்கிய ஒடிசா, 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் தில்லி அணிக்கு 82 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பின்னர் ஆடிய தில்லி அணி 15 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதேபோல் அசாம், ஜார்க்கண்ட அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் அசாம் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப், மேற்கு வங்க அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில், பஞ்சாப் அணி, இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்:
தமிழக அணி-538/4
(தினேஷ் கார்த்திக் 154*,
அபாரஜித் 112,
பிரசன்னா 74*,
சுனில் ராஜு 2வி/148)
கர்நாடக அணி-562/6
(கணேஷ் சதீஷ் 200*,
கெüதம் 130*, பவன் 69,
ரங்கராஜன் 3வி/119 )



-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஜோஹர் ஹாக்கி: ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

மலேசியாவில் நடைபெற்று வரும்ஜோஹர் ஹாக்கி கோப்பை போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி, 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.

திங்கள்கிழமை நடைபெற்ற லீக் சுற்றில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது இந்திய அணி. 

இப்போட்டியில், முன் கள வீரரான மன்தீப் சிங் சிறப்பாக விளையாடி 2 கோல்களை அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவரே ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது இந்திய அணி. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Saturday 10 November 2012

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் 538 ரன்களில் டிக்ளேர்

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கர்நாடகத்துக்கு எதிராக தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் 168 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 538 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

சென்னையில் நடைபெற்று வரும் இப் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த தமிழகம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. 

2ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் பத்ரிநாத் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் களம் புகுந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அபராஜித், முதல்தர கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து பிரசன்னா களம்புகுந்தார். கார்த்திக்-பிரசன்னா இருவரும் சிறப்பாக விளையாட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வேகமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் சதமடித்தார். தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 538 ரன்களை எட்டியபோது டிக்ளேர் செய்தது. அப்போது தினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 154, பிரசன்னா 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய கர்நாடகம் 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் 478: மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 478 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கனித்கர் 119, சக்சேனா 114 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மும்பை விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது.

லட்சுமண் சதம்: மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் 341 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லட்சுமண் 120 ரன்களும், விகாரி 81 ரன்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய மத்தியப் பிரதேச 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஏடிபி டென்னிஸ் : பூபதி-போபன்னா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்.

போபண்னா - மகேஸ் பூபதி
லண்டன்: ஏடிபி உலக சுற்றுப்போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் இந்திய,  வீரர்களான மகேஸ் பூபதி - ரோஹன் போபன்னா இணை அரையிறுதிக்கு  முன்னேறியது.

இப்போட்டியின் "ஏ' பிரிவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பூபதி - ரோஹன் இணை, தர வரிசையில் இரண்டாமிடத்திலிருக்கும் பெலாரஸ்யன் - கனடிய மேக்ஸ் மிர்ன்யி - டேனியல் நெஸ்டர் இணையை 7-6 (5) 6-7(5) 10-5 என்ற புள்ளிகளில் வீழ்த்தியது. இந்தப்போட்டி கிட்டத்தட்ட 2 மணி நேரம் நீடித்தது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Friday 9 November 2012

ஆசிய இளையர் பளுதூக்கும் போட்டி:சந்திரிகா தரஃப்தர், அருணா சந்தா மற்றும் ராகுல் பதக்க வேட்டை.!!

சந்திரிகா தரஃப்தர்
சந்திரிகா தரஃப்தர்
யாங்கூன்: மியான்மரில் நடைபெற்றுவரும் ஆசிய இளைஞர் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் ஆர்.வி.ராகுல் இன்று மேலும் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றதன் மூலம், இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருக்கிறது.

ஆண்கள் இளையர் 77 கிலோ எடைப்பிரிவில் ராகுல், ஸ்நாட்ச், க்ளீன் அண்ட் ஜெர்க் மற்றும் மொத்தப்பளுவாக 280 கிலோ தூக்கி மூன்று தங்கப்பதக்கங்களை வென்றார். 

முன்னதாக ஆண்கள் இளையர் 56 கிலோ எடைப்பிரிவில் அருணா சாந்தா இரண்டு தங்கப்பதக்கங்களையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும், பெண்கள் இளையர் 44 கிலோ எடைப்பிரிவில் சந்திரிகா தரஃப்தர்  132 கிலோ மொத்தப்பளு தூக்கி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருக்கின்றனர். இதன் மூலம் இந்தியா பெற்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருக்கிறது.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

பீட்டர்சன் நூறு..இங்கிலாந்து 408/3..பலிக்குமா இந்தியாவின் தந்திரம்.?


அஹமதாபாத்: அரியானா அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 408 ஓட்டங்களைப்பெற்றது. இதில் பீட்டர்சன் 110, குக் 94, நிக் காம்ப்டன் மற்றும் அயன் பெல் ஆகியோர் அரைநூறை பெற்றனர்.

அரியானாவின் மிக மிக மோசமான பந்துவீச்சில் பயிற்சி பெறும் இங்கிலாந்து அணி, முதல் போட்டியில் உலகத்தரம் மிக்க இந்திய சுழல்பந்துவீச்சை எதிர் கொள்ளப்போகிறது என்பது சிந்தனைக்குரியது! இன்றைய அரியானா அணியின் பந்துவீச்சைப்பார்த்தபோது, எங்கள் தெருவில் விளையாடும் சிறுவர்கள், இதை விட சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.

பொதுவாகவே பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்படுவதன் நோக்கம், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணி, உள்நாட்டின் காலநிலை, ஆட்டக்களம், பந்தின் வேகம் மற்றும் சுழலும் தன்மை மற்றும் இன்னும் சில நிலைமைகளை புரிந்துகொள்வதற்காகவே! ஆனால் கடந்த இரண்டு போட்டிகளையும் பார்க்கும் போது இங்கிலாந்து அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம், இந்த வாய்ப்புகளை வழங்கிவிடக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருப்பதாகத்தோன்றுகிறது. முதல் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து அணியின் கண்ணில் கூட காட்டவில்லை. இரண்டாவது  மற்றும் மூன்றாவது போட்டியிலும், அஸ்வின், ஹர்பஜன்,பியுஸ் சாவ்லா, ப்ரக்யான் ஓஜா ஆகியோரை களமிறக்காமலே இங்கிலாந்திற்க்கு பயிற்சியளிக்கிறது இந்தியா. இதில் இங்கிலாந்து அணியினர், இந்திய அணியின் பந்துவீச்சை படிக்க இயலாமல் போவது ஒருபக்கம் இருந்தாலும், அதேவேளையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்தின் மட்டைத்திறன் பற்றி அறியமுடியாமல் போவதை மறுக்க முடியாது.

இந்நிலையில், கெவின் பீட்டர்சனின் அதிரடி நூறும், அணித்தலைவர் அலிஸ்டர் குக்கின் 94 உம், நிக் காம்ப்டன் மற்றும் அயன் பெல்லின் ஐம்பதுகளும் இங்கிலாந்து அணிக்கு எந்த வகையில் கைகொடுக்கும் என்பது முதல் ஐந்து நாள் போட்டி துவங்கியவுடன் தான் தெரியும். இந்தியாவின் தந்திரம் பலிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்..


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.


ஏடிபி: பயஸ் இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்.

ரோடக் ஸ்டெபனக், லியாண்டர் பயஸ்
ரோடக் ஸ்டீபனெக் -லியாண்டர் பயஸ்
லண்டன்: ஏடிபி உலக சுற்றுப்போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் இந்திய, செக் குடியரசு வீரர்களான பயஸ்-ராடெக் ஸ்டீபனெக் இணை அரையிறுதிக்கு  முன்னேறியது.

இப்போட்டியின் "ஏ' பிரிவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பயஸ்-ஸ்டீபென்க் இணை, ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ், மார்க் லோபஸ் இணையை 7-5, 6-4 என்ற நேர் புள்ளிகளில் வீழ்த்தியது. இந்தப்போட்டி 1 மணி 32 நிமிடங்கள் நீடித்தது.

இந்திய - செக் குடியரசு இணை, இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், சோணி ஓபன் மற்றும் ஷர்ங்காய் ஓபன் ஆகிய போட்டிகளில் வாகை சூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக